news

News April 5, 2025

மேலும் சில மீனவர்கள் விடுதலை

image

இலங்கை அரசு மேலும் சில தமிழக மீனவர்களை விடுவிக்க சம்மதித்திருப்பதாக வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தைத் தொடர்ந்து, நேற்று 11 மீனவர்கள் முதற்கட்டமாக விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய மிஸ்ரி, மீனவர்கள் விவகாரம் தொடர்பாக இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி பேசியிருப்பதாகக் கூறினார்.

News April 5, 2025

9-ம் தேதி தமிழக பாஜக புதிய தலைவர் அறிவிப்பு

image

தமிழக பாஜக புதிய தலைவர் யார் என்பது குறித்து வருகிற 9-ம் தேதி அறிவிப்பு வெளியாகலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ள தருணத்தில் உடனடியாக தலைவரை மாற்ற கட்சி மேலிடம் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. மோடி டெல்லி திரும்பியதும் பாஜக மூத்த தலைவர் கிரண் ரிஜிஜூ சென்னை வருவார் என்றும், பிறகு கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

News April 5, 2025

லோன் வாங்கியோருக்கு ஹேப்பி நியூஸ்

image

வங்கிகளில் லோன் வாங்குபவர்களை பாதுகாக்க RBI புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது: அவை *கடன் வழங்குபவர்கள், கடன் காலத்தை அதிகரிக்கும் முன் கடனாளியின் ஒப்புதல் பெற வேண்டும் *வட்டிவிகித மாறுபாடால் EMI (அ) tenure-ஐ மாற்றினால், தெரிவிக்க வேண்டும் *கடன் வாங்குபவரின் ஒப்புதல் இல்லாமல் EMI அதிகரிப்பு (அ) காலநீட்டிப்பு கூடாது. வட்டி, மற்ற விதிகள் பற்றிய விவரங்களுடன் கடன் அறிக்கையை(KFS) முன்கூட்டி தரவேண்டும்.

News April 5, 2025

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

News April 5, 2025

புலி போல சாதித்த எலி!

image

கம்போடியாவில் ஒரு எலி உலக சாதனை படைத்திருக்கிறதாம். அதுவும் நிலத்தில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை கண்டுபிடித்து கொடுத்து மனிதர்களின் உயிரை காப்பாற்றி இருக்கிறதாம். ஆப்ரிக்கன் எலியான அதன் பெயர் ரோனின். கம்போடியா ராணுவத்தில் கடந்த 2021 முதல் பணியாற்றி வருகிறது. தற்போது வரை 109 கண்ணிவெடிகளை மோப்பம் பிடித்து அகற்ற உதவி இருக்கிறது ரோனின். சாதிக்க பிறந்த எலி!

News April 5, 2025

மைதானத்தில் ‘தல’ தோனியின் பெற்றோர்

image

தோனி இன்றோடு ஓய்வு பெறவிருப்பதாக தகவல் வெளியாகும் சூழலில் அவரது பெற்றோர் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வருகை தந்துள்ளனர். இதனால், CSK மற்றும் தோனியின் ரசிகர்கள், அவர் உண்மையில் ஓய்வு பெறுகிறாரோ என்ற கலக்கத்தில் உள்ளனர். முன்னதாக ஒருமுறை, தான் சென்னை மைதானத்தில்தான் ஓய்வை அறிவிப்பேன் என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

News April 5, 2025

JDU-இல் இருந்து 5 தலைவர்கள் விலகல்

image

வக்பு வாரிய மசோதாவுக்கு ஆதரவளித்ததால் அதிருப்தியடைந்து, JDU-வில் இருந்து 5 மூத்த தலைவர்கள் விலகியுள்ளனர். JDU-ன் பீகார் மாநில பொதுச் செயலாளர் முகமது சித்திகி, சிறுபான்மை பிரிவு செயலாளர் ஷாநவாஸ் மாலிக் உள்ளிட்ட 4 பேர் ஏற்கெனவே விலகினர். இந்நிலையில், இளைஞரணி துணைத் தலைவர் தப்ரீஸ் ஹாசனும் விலகியுள்ளார். அடுத்தடுத்து தலைவர்கள் விலகுவது JDU தலைவர் நிதிஷ்குமாருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

News April 5, 2025

கழுத்தை நெரித்த கடன்: விபரீத முடிவெடுத்த பெண்!

image

குஜராத்தில் கடன்சுமை தாங்காமல், பெண் ஒருவர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஜாம் நகர் மாவட்டத்தில் பானு பென் ஜீவாபாய் என்பவர் தனது 4 குழந்தைகளையும் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இது தொடர்பாக உறவினர்களிடம் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை எதற்கும் தீர்வல்ல. அந்த எண்ணம் எழுந்தால் 104 என்ற எண்ணை அழைக்கவும்.

News April 5, 2025

மீண்டும் CSK அணிக்கு திரும்பிய கான்வே

image

அடுத்தடுத்து தோல்வியை சந்தித்த CSK அணி, இன்று இரண்டு மாற்றங்களுடன் களம் இறங்கியுள்ளது. DC உடனான இன்றைய போட்டியில், தொடக்க வீரர் கான்வே விளையாடவுள்ளார். ராகுல் திரிபாதிக்கு பதிலாக முகேஷ் சவுத்ரி விளையாடவுள்ளார். கடந்த போட்டியில் விளையாடிய ஜேமி ஓவர்டனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கேப்டன் ருதுராஜ் விளையாடும் தகுதியுடன் இருப்பதால் அவருக்கு ஓய்வு அளிக்கப்படவில்லை.

News April 5, 2025

தங்கம் விலை பாதியாக குறையுமா?

image

தங்கம் விலை கடந்த 2 நாள்களாக சரிந்து வரும் நிலையில், பாதியாக குறையும் என பலரும் சோஷியல் மீடியாவில் கருத்து கூறி வருகின்றனர். இது தொடர்பாக பொருளாதார வல்லுநர்களிடம் கேட்டபோது, உலக அளவில் முதலீட்டுக்காக தங்கம் வாங்குவது குறைந்தது மற்றும் டிரம்பின் புதிய வரி விதிப்பே காரணம் என்றனர். மேலும், ஒரு சில நாள்களுக்கு இந்த நிலை நீடிக்கும் ஆனால், பாதியாகக் குறைய வாய்ப்பில்லை எனக் கூறியுள்ளனர்.

error: Content is protected !!