India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடுத்தரவர்க்க, மாநகரவாசிகளின் அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி, இன்று அனைத்து தரப்புக்குமானதாக மாறிவருகிறது. சமீபத்திய தொடரில், ஒவ்வொரு டெஸ்ட்டிலும் குறைந்தது 8 வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். லார்ட்ஸில் அதிகபட்சமாக 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள் களமிறங்கினர். கில்(Sikh) வழிநடத்தும் அணியின் வேகப்பந்து வீச்சுப் படைக்கு பும்ரா(Sikh), சிராஜ்(Muslim) தலைமை ஏற்றுள்ளனர்.
வயநாடு காவல்துறையில் MP பிரியங்கா காந்தியை காணவில்லை என பாஜக நிர்வாகி முகுந்தன் பல்லியரா மனு அளித்துள்ளார். பிரியங்கா காந்தியை 3 மாதங்களாக காணவில்லை எனவும், சூரல்மலையில் ஏற்பட்ட பாதிப்பின் போது மக்களோடு இருக்கவில்லை எனவும் புகாரளித்துள்ளார். முன்னதாக, மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி கடந்த 2 மாதங்களாக தொகுதியில் காணவில்லை என திருச்சூர் போலீஸிடம் மாணவர் காங்கிரஸ் புகாரளித்திருந்தது.
HR ஒருவரின் போஸ்ட் நெட்டிசன்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. அந்த பதிவில், தங்கள் ஆபிஸில் வேலை செய்யும் Employee ஒருவர், தனது முதல் சம்பளம் வந்த 5 நிமிடங்களிலேயே வேலையை ராஜினாமா செய்ததாக குறிப்பிட்டுள்ளார். ஒருவரை பல கட்ட Interview-களுக்கு பிறகு, தேர்வு செய்து வேலை கொடுத்தால், இப்படி செய்வது தொழில் தர்மமா? எனவும் அவர் கேட்கிறார். நீங்க என்ன நினைக்கிறீங்க.. கமெண்ட் பண்ணுங்க?
முருகன் வரலாறு என்ற பெயரில் ஸ்டாலின் புகழ் பாடப்படுவதைக் காணும் போது அவர் எப்போது முருகராக மாறினார் என்ற கேள்வி எழுவதாக அன்புமணி குறிப்பிட்டுள்ளார். பழனி முருகன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களிடம், முருகப் பெருமான் வரலாறு என்று கூறி, ₹2700 விலை கொண்ட முருகன் மாநாட்டு மலர் கட்டாயமாக விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
OPS-ஐ மீண்டும் கூட்டணியில் இணைக்க பாஜக முயற்சி செய்வதாக கூறப்பட்ட நிலையில், அப்படி எதுவும் நடக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. தமிழகம் வந்த பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷை சந்திக்க வருமாறு OPS-க்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதை பன்னீர்செல்வமே தன்னிடம் கூறியதாக டிடிவி தெரிவித்துள்ளார். டெல்லி பாஜக தலைமையே நேரடியாக ஓபிஎஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தும்படியும் அவர் வலியுறுத்தினார்.
11:30 மணிக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள். கேள்விகளுக்கு <<17378674>>இங்கே <<>>கிளிக் செய்யவும்.
1. ஜுன்கோ தபே (ஜப்பான்)
2. 3 பிரிவுகள் (எழுத்து, சொல், பொருள்)
3. 1908
4. இந்தியா
5. Mercury & Venus.
✪தூய்மை பணியாளர்களின் <<17378294>>ஸ்டிரைக் <<>>தொடரும்.. தமிழக அரசுக்கு நெருக்கடி
✪வீட்டிற்கு வரும் <<17378582>>ரேஷன் <<>>பொருள்கள்.. தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்த CM
✪மாநிலம் அதிர <<17378627>>மாநாட்டுக்கு <<>>தயாராவோம்.. தவெக தலைவர் விஜய்
✪தங்கம் விலை ₹640 சரிவு.. சவரன் ₹74,360-க்கு விற்பனை
✪கூலி <<17378338>>பீவர்<<>>.. ₹4,500க்கு விற்பனையாகும் FDFS டிக்கெட்
உலக புகழ் பெற்ற கால்பந்து வீரர் <<17376793>>ரொனால்டோவுக்கும் <<>>அவரது நீண்ட நாள் காதலி ஜார்ஜினா ரோட்ரிகஸுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. ஓவல் வடிவத்தில் வெட்டப்பட்டுள்ள 25- 30 கேரட் வைர மோதிரத்தின் போட்டோவை ஜார்ஜினா வெளியிட்டுள்ளார். இந்த மோதிரத்தின் விலை சுமார் ₹16.8 கோடி முதல் ₹42 கோடி வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது உலகின் அதிக விலை கொண்ட மோதிரங்களில் ஒன்று எனவும் கூறப்படுகிறது.
திருச்சி EX மேயரும், காங்., பெண் தலைவர்களில் ஒருவருமான சுஜாதா மாரடைப்பால் இன்று உயிரிழந்தார். ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த அவர், மாநில துணைத் தலைவர் உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். 2022-ல் நடந்த தேர்தலில் வெற்றிபெற்று மாமன்ற உறுப்பினராக தேர்வான சுஜாதாவை மீண்டும் மேயராக்க வேண்டும் என ஸ்டாலினை நேரடியாக சந்தித்து ப.சி., வலியுறுத்தும் அளவுக்கு திருச்சி முகமாக இருந்தவர்.
கல்லறைத் திருநாளன்று <<17372693>>ஆசிரியர் தகுதித் தேர்வு <<>>நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டதற்கு EPS கண்டனம் தெரிவித்துள்ளார். முதல்வரை போலவே மக்கள் உணர்வுகளை அறியாமல் அலட்சியமாக திமுக அரசு செயல்படுவதாக சாடியுள்ளார். உடனடியாக ஆசிரியர் தகுதித் தேர்வை வேறொரு உகந்த தேதிக்கு மாற்றி அறிவிக்க வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.