news

News April 5, 2025

பாம்பன் புதிய பாலம் ரெடி.. நாளை திறக்கிறார் மோடி

image

பாம்பனில் ரூ.550 கோடியில் கட்டப்பட்ட புதிய ரயில்வே பாலத்தை மோடி நாளை திறந்து வைக்கவுள்ளார். 1914இல் அங்கு கட்டப்பட்ட பாலத்திற்கு பதிலாக கடலில் 2.07 கி.மீ. தூரம் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இதன் மைய பகுதியில் கடலில் கப்பல்கள் செல்ல அனுமதிக்கும் வகையில் தூக்கு பாலம் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. முந்தைய பாலத்தை விட இது 3 மீட்டர் உயரமானது. ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் மூலம் கட்டுமானம் நடந்துள்ளது.

News April 5, 2025

மளமளவென விக்கெட்டுகளை இழக்கும் CSK

image

DCக்கு எதிரான IPL போட்டியில் CSK அணி சடசடவென விக்கெட்டுகளை இழந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த DC, 184 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த CSKவின் தொடக்க வீரர்கள் ரச்சின் 3 ரன்களிலும், கான்வே 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் ருதுராஜ் 5 ரன்கள் மட்டும் எடுத்து பெவிலியன் திரும்பினார். இந்த அணி 5.3 ஓவர்களில் 41 ரன்கள் மட்டும் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

News April 5, 2025

தீப்பிடிக்கும் AC… மக்களே எச்சரிக்கை!

image

கோடை தீவிரமடையும்போது, ஏசி சாதனங்கள் வெடிக்கும் விபத்துகளும் அதிகரிக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் ஏசி இயந்திரத்தை சரியாக பராமரிக்காதது தான் காரணம் என்கின்றனர் நிபுணர்கள். குறிப்பாக ஏசியில் தூசி அதிகம் சேர்வது, மின்சார பழுதுகள் மற்றும் மின்னழுத்த ஏற்ற இறக்கங்கள் தான் வெடித்து தீவிபத்து ஏற்பட முக்கிய காரணமாக உள்ளனவாம். ஆகவே, உடனே உங்கள் ஏசியை பராமரியுங்கள்; அச்சமின்றி தூங்குங்கள்!

News April 5, 2025

ஏசி தீப்பிடிக்க காரணங்கள்

image

*கண்டென்சர் காயிலில் தூசிகள் அதிகம் சேர்வதால், வெப்பம் வெளியேற முடியாமல் அளவுக்கதிகமாக சூடாகிறது *மட்டமான வயரிங், ப்ளக் பயன்பாடு, பழைய வயர்கள் பயன்படுத்துவது *வோல்டேஜ் ஏற்ற இறக்கம் *ஏசிக்கு உரிய கேஸ் வகைகளை பயன்படுத்தாமல், தவறான கேஸ் பயன்படுத்துவது. இந்த தவறுகளை முற்றிலும் தவிர்த்தால், ஏசி தீப்பிடிக்கும் விபத்துகளையும் தடுக்கலாம்.

News April 5, 2025

அமெரிக்காவில் ₹770 லட்சம் கோடி காலி

image

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அதிரடி பொருளாதார முடிவுகளால் அந்நாட்டு பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டுள்ளன. குறிப்பாக, வெள்ளிக்கிழமை அந்நாட்டு பங்குச்சந்தைகள் 5% மதிப்பினை இழந்தன. அதாவது, ஒரே நாளில் முதலீட்டாளர்கள் ₹770 லட்சம் கோடியை ($9 ட்ரில்லியன்) இழந்துள்ளனர். அமெரிக்கா மட்டுமல்லாமல், இந்தியா உள்ளிட்ட பல நாட்டு சந்தைகளும் சரிவை சந்தித்து வருகின்றன.

News April 5, 2025

JOB ALERTS: ரயில்வேயில் 9,970 காலியிடங்கள்

image

ரயில்வேயில் 9,970 காலியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்பட்டுள்ளது. இது லோகோ பைலட் பணிக்கான அறிவிப்பாகும். இதில் தெற்கு ரயில்வேயின் 510 பணியிடங்களும் அடங்கும். வேலைக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஃபிட்டர், எலெக்ட்ரீசியன் போன்ற ஏதேனும் ஐடிஐ படிப்பும் படித்திருக்க வேண்டும். வயது வரம்பு 18-30. சம்பளம் மாதம் ரூ.19,900. வேலைக்கு விண்ணப்பிக்க மே 9ஆம் தேதி கடைசி நாள். இந்தத் தகவலைப் பகிருங்க.

News April 5, 2025

ஊடகங்களின் ‘ஹாட் டாபிக்’ அண்ணாமலை

image

தமிழக அரசியலில் அண்ணாமலை மீண்டும் ஹாட் டாபிக் ஆக மாறியுள்ளார். பாஜக மாநிலத் தலைவர் பதவி தொடர்பாக டெல்லியில் மேலிடத் தலைவர்களை அவர் சந்தித்து பேசிய தகவலாலும், நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் தலைவர் பதவி ரேஸிஸ் தாம் இல்லை எனக் கூறியதாலும் பேசு பொருளாக மாறியுள்ளார். டிவி சேனல்கள் அண்ணாமலை குறித்தும், அடுத்த பாஜக மாநில தலைவர் யார் என்பது குறித்தும் பிரத்யேக செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

News April 5, 2025

CSK அணிக்கு 184 ரன்கள் இலக்கு

image

சென்னையில் நடைபெற்று வரும் CSK vs DC ஐபிஎல் போட்டியில் CSK அணிக்கு 184 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியின் தொடக்க வீரர் ராகுல், அதிகபட்சமாக 77 ரன்கள் விளாசினார். இதனையடுத்து, 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி, 6 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் குவித்துள்ளது. CSK அணியின் கலீல் அகமது அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

News April 5, 2025

ரேப் செய்துவிட்டு ரூ.100 கொடுத்த கொடூரம்

image

பிஹார், லக்கிசராயில் ரயிலில் சென்று கொண்டிருந்தார் 18 வயது இளம்பெண். அவர் முகவாட்டத்தை அறிந்த ஒருவன், மெல்ல பேச்சுக்கொடுத்து, அவர் வேலைத் தேடுவதை அறிந்தான். பெண்ணுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறிய அந்நபர், கியூல் என்ற ஸ்டேஷனில் இறங்க வைத்துள்ளான். அங்கே அவனது கூட்டாளிகள் 7 பேர் வந்துசேர, அப்பெண்ணை கேங் ரேப் செய்துவிட்டு, கையில் ரூ.100-ஐ திணித்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டனர். நாடு எங்கே போகிறது?

News April 5, 2025

மேலும் சில மீனவர்கள் விடுதலை

image

இலங்கை அரசு மேலும் சில தமிழக மீனவர்களை விடுவிக்க சம்மதித்திருப்பதாக வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தைத் தொடர்ந்து, நேற்று 11 மீனவர்கள் முதற்கட்டமாக விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய மிஸ்ரி, மீனவர்கள் விவகாரம் தொடர்பாக இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி பேசியிருப்பதாகக் கூறினார்.

error: Content is protected !!