news

News November 2, 2025

நெல்லி மருத்துவ குணங்கள்

image

உடலுக்கு பல்வேறு நன்மைகள் தரும் நெல்லிக்காய், மலிவு விலையில் எளிதில் கிடைக்கும். இது தோல், முடி, கண் உள்ளிட்ட உடல் உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கு பெரும் பயனளிக்கிறது. தினசரி நெல்லிக்காய் சாப்பிடுவது, உடலை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள உதவுகிறது. நெல்லிக்காய் உடலுக்கு என்னென்ன நன்மைகள் தருகிறது என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க.

News November 2, 2025

வீரர்கள் வந்தனர், பயந்தவர்கள் வரவில்லை: RS பாரதி

image

SIR தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் வீரர்கள் வந்தார்கள் என்றும், பயந்தவர்கள் வரவில்லை என்றும் RS பாரதி விமர்சித்துள்ளார். கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தும் பங்கேற்காதவர்கள் குறித்த கேள்விக்கு, வராதவர்களை பற்றி கவலை இல்லை என்றும், அவர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக பயந்து கொண்டு வரவில்லை எனவும் குறிப்பிட்டார். ஜனநாயக உணர்வோடு வந்தவர்களை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

News November 2, 2025

உடல் உறுப்புகளை திருடி விட்டனர்: ஹமாஸ்

image

உயிரிழந்த பாலஸ்தீனியர்களின் உடல்களில் இருந்து இஸ்ரேலிய ராணுவம் உறுப்புகளை திருடிவிட்டதாக ஹமாஸ் மற்றும் காஸா சுகாதார அமைச்சக அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஹமாஸ் – இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக சமீபத்தில் பலியான கைதிகளின் உடல்கள் பரிமாற்றம் செய்யப்பட்டன. இஸ்ரேல் வழங்கிய உடல்களை பரிசோதித்த காசா அதிகாரிகள், சடலங்களின் உள்ளே பஞ்சு அடைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளனர்.

News November 2, 2025

பிரபல நடிகர் காலமானார்

image

ஜேம்ஸ்பாண்ட் படத்தில் வில்லனாக நடித்து உலகம் முழுவதும் புகழ்பெற்ற டெக்கி கார்யோ(72) காலமானார். பேட் பாய்ஸ், நோஸ்ட்ராடாமஸ், த பேட்ரியாட் என பிரபலமான பல படங்களில் இவர் நடித்துள்ளார். பிரான்ஸில் பிறந்த கார்யோ, த மெசஞ்சர், கிஸ் ஆஃப் டிராகன் உள்ளிட்ட பிரெஞ்சு படங்களிலும் நடித்துள்ளார். அவரது மறைவுக்கு ஹாலிவுட் திரைபிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP

News November 2, 2025

மல்லையா, நீரவ் மோடியை நாடு கடத்துவது எப்போது?

image

நிதி மோசடியில் ஈடுபட்ட 42 பேர், கடந்த 2 ஆண்டுகளில் நாடு கடத்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் தப்பியுள்ளவர்கள், அந்தந்த நாட்டு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு விரைவில் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவார்கள் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி உள்ளிட்ட பலர் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

News November 2, 2025

ஆந்திரா கூட்டநெரிசல்: கோயில் நிர்வாகம் சொல்வது என்ன?

image

<<18173836>>ஆந்திர கோயில் கூட்டநெரிசல் <<>>விவகாரத்தில், கோயில் நிர்வாகம் அரசுக்கு தகவல் தெரிவித்து இருந்தால், உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம் என அம்மாநில CM சந்திரபாபு நாயுடு தெரிவித்து இருந்தார். ஆனால், சொந்த நிலத்தில் கோயில் கட்டிய நான் ஏன் அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என அக்கோயிலை கட்டிய ஹரி முகுந்தா பாண்டா கூறியுள்ளார். மேலும், எத்தனை வழக்குகளை போட்டாலும் தனக்கு கவலை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

News November 2, 2025

2025 WCC-ல் சதம் விளாசிய வீராங்கனைகள்

image

2025 ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், இன்று இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் அடிக்கப்பட்ட ஒவ்வொரு சதமும் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது மட்டுமல்ல, பெண்கள் கிரிக்கெட்டின் தரத்தையும் உயர்த்தி உள்ளது. சதம் அடித்த வீராங்கனைகள் யார் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. கமெண்ட் பண்ணுங்க.

News November 2, 2025

பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான நியூஸ்

image

நாடு முழுவதுமுள்ள அனைத்து CBSE பள்ளிகளுக்கான கல்வி செயல்திறன் அட்டை(ரிப்போர்ட் கார்டு) வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 10, +2 மாணவர்களின் கல்வி திறன் விவரங்கள் பாடவாரியாக ரிப்போர்ட் கார்டில் இடம்பெற்றிருக்கும். இதன்மூலம், மாணவர்கள் எந்தெந்த பாடத்தில் குறைவான மார்க் பெற்றுள்ளனர் என அறிந்து கூடுதல் கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதனால், மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும். SHARE IT.

News November 2, 2025

SIR-க்கு எதிராக குரல் கொடுப்பது கடமை: CM

image

தமிழக மக்களின் வாக்குரிமையை பறித்து, ஜனநாயகத்தை படுகொலை செய்யும் SIR-க்கு எதிராக, ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்து கட்சிகளின் கடமை என்று CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற 49 கட்சிகளின் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், கூட்டத்தில் பங்கேற்காதவர்கள் தங்களுடைய கட்சிகளில் SIR குறித்து விவாதித்து, ஜனநாயகத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

News November 2, 2025

சபரிமலை செல்ல சிறப்பு ரயில்!

image

சபரிமலை மண்டல பூஜையை முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருந்து கொல்லத்திற்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நவ.14 முதல் ஜன.16 வரை 2 மாதங்களுக்கு இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும். வெள்ளி இரவு 11.55-க்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 4.30-க்கு கொல்லத்தை அடையும். மறுமார்க்கத்தில் சனி இரவு 7.35-க்கு புறப்பட்டு, நண்பகல் 12 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

error: Content is protected !!