India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியை ராஜஸ்தான் அணி வெற்றி கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான், அபாரமாக விளையாடி 205 ரன்கள் குவித்தது. ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 67 ரன்கள் எடுத்தார். அதனை சேஸ் செய்ய களமிறங்கிய பஞ்சாப் ஆரம்பம் முதலே சொதப்பியது. இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 155 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ராஜஸ்தானின் ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்தியா, இலங்கை இடையே முதல்முறையாக பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மோடி, திசநாயகே ஆகியோர் இடையேயான சந்திப்பிற்கு பிறகு, 2 நாடுகளும் 7 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இதில் திரிகோணமலையை எரிசக்திக்கான மையமாக மாற்றும் ஒப்பந்தம், பாதுகாப்புத் துறை தொடர்பான ஒப்பந்தம் ஆகியவையும் அடங்கும். திரிகோணமலையில் உள்ள திரிகோணஸ்வர் கோயிலை புனரமைக்க இந்தியா உதவும் என மோடி அறிவித்தார்.
பாம்பன் புதிய பாலத்தை நாளை பிரதமர் மோடி திறந்து வைப்பதைத் தொடந்து, ஏப்ரல் 7ஆம் தேதி முதல் ராமேஸ்வரத்திற்கு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. பாம்பன் பாலத்தின் வேலைகள் நடைபெற்று வந்ததால், ரயில்கள் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், வரும் 7ஆம் தேதி முதல் சேது உள்ளிட்ட ரயில்கள் ராமேஸ்வரம் வரை செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
➤மேஷம் – வெற்றி ➤ரிஷபம் – நலம் ➤மிதுனம் – புகழ் ➤கடகம் – உயர்வு ➤சிம்மம் – முயற்சி ➤கன்னி – லாபம் ➤துலாம் – நன்மை➤விருச்சிகம் – சுகம் ➤தனுசு – பரிசு ➤மகரம் – சாந்தம் ➤கும்பம் – யோகம் ➤மீனம் – அமைதி.
வக்ஃப் வாரிய மசோதாவுக்கு நாடாளுமன்ற இரு அவைகளும் ஒப்புதல் அளித்துவிட்டன. இனி அதன்மீது என்ன நடக்கும் என தற்போது பார்க்கலாம். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் ஒப்புதலுக்கு மசோதா அனுப்பி வைக்கப்படும். அதற்கு அவர் ஒப்புதல் அளித்ததும், மசோதா சட்டமாகும். பிறகு அதை கெஜட்டில் மத்திய அரசு வெளியிடும். அப்போது சட்டம் அமலாகும் தேதியும் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
தோனி தற்போதைக்கு ஓய்வில்லை என்று சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார். தோனியின் பெற்றோர் சிஎஸ்கே இன்று விளையாடும் போட்டியை காண சென்னை மைதானத்திற்கு வந்தனர். இதை வைத்து அவர் இன்று ஓய்வு பெறக்கூடும் எனத் தகவல் வெளியானது. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த பிளெமிங், அந்தத் தகவலில் உண்மையில்லை என்றும், தோனி இன்னும் சிறப்பாக விளையாடி வருகிறார் என்றும் கூறியுள்ளார்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் (ONOE ) அடுத்த தேர்தலில் அமலாக இருப்பதாக வெளியாகும் செய்திகளை நிர்மலா சீதாராமன் மறுத்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தலுக்காக ரூ.1 லட்சம் கோடி செலவிடப்பட்டதாகவும், ONOE அமலானால் பெரும் தொகையை சேமிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 2034க்கு பிறகே ONOE அமல்படுத்தப்படும், சட்டப்பேரவை, மக்களவைக்கு மட்டுமே பொருந்தும், உள்ளாட்சி அமைப்புக்கு அல்ல என்றும் கூறியுள்ளார்.
ONOE திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆதரித்ததாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ONOE நாட்டுக்கு புதிதல்ல என்றும், 1960ம் ஆண்டுகள் வரை அமலில் இருந்ததுதான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் நலனுக்காகவே ONOE திட்டம் கொண்டு வரப்படுவதாகவும், இதை கருணாநிதி ஆதரித்த நிலையில், அவரின் மகனும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் எதிர்ப்பதாகவும் விமர்சித்துள்ளார்.
பிரபல நடிகர் சஹானா ஸ்ரீதர் (62) மாரடைப்பால் காலமானார். அழியாத கோலங்கள், ராஜவம்சம் உள்ளிட்ட படங்களிலும், தாமரை, சித்தி-2 உள்ளிட்ட டிவி தொடர்களிலும் நடித்துள்ளவர் சஹானா ஸ்ரீதர். சஹானா தொடரில் நடித்து பிரபலமானதால் சஹானா ஸ்ரீதர் என்று அழைக்கப்பட்டார். சென்னையில் வசித்த அவருக்கு இன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ஹாஸ்பிடலில் சேர்த்தபோது மாரடைப்பால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
மன்மோகன் சிங் மனைவிக்கு அளிக்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு குறைத்துள்ளது. மன்மோகன் சிங், அவரின் மனைவி குர்சரண் கெளருக்கு இருந்த பாதுகாப்பு அச்சுறுத்தலால் இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. 2024 டிசம்பரில் மன்மோகன் மறைந்த பிறகும் இது நீடித்தது. அரசு ஆய்வில் அச்சுறுத்தல் குறைந்ததால், இசட் பிரிவாக பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இனி 36 கமாண்டோக்கள் பாதுகாப்பில் ஈடுபடுவர்.
Sorry, no posts matched your criteria.