India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக பாஜக தலைவர் விவகாரத்தில் அடுத்தடுத்து பல்வேறு தகவல்கள் வெளியாகின்றன. அண்ணாமலையை மாற்றக் கூடாது என தலைமைக்கு பல இ-மெயில்கள் பறந்துள்ளதாம். இதனால் அண்ணாமலைக்கு தலைவர், நயினாருக்கு ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு முடிவாகியுள்ளதாகத் தெரிகிறது. மேலும், அண்ணாமலை விவகாரத்தில் அதிமுகவை ஆசுவாசப்படுத்த மத்திய அமைச்சரவையில் ஒரு இடம் என்ற ஜாக்பாட்டை கொடுக்க பாஜக திட்டமிட்டுள்ளதாம். நீங்க என்ன நினைக்கிறீங்க?
கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் (MET) தெரிவித்துள்ளது. மேலும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியே செல்வோர் குடையுடன் செல்லுங்கள் மக்களே..!
இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடி, 1996ல் உலகக்கோப்பை வென்ற அன்றைய இலங்கை கிரிக்கெட் அணியினரை சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பு மிகுந்த மகிழ்ச்சி அளித்ததாக xல் பதிவிட்ட பிரதமர் இந்த அணியினர் எண்ணற்ற விளையாட்டு ரசிகர்களின் மனதைக் கவர்ந்திருந்தாகவும் தெரிவித்துள்ளார். அவர்கள் பிரதமருக்கு நினைவு பரிசு ஒன்றையும் வழங்கினர்.
இனி வெறுமனே நடைபயிற்சி செய்யாமல், பவர் வாக்கிங் செய்யுங்க. அது உடலுக்கு சவாலை அதிகரிக்கும். சிறிய அளவிலான எடையை (Dumbbells) கையில் சுமந்து, சாதாரண நடை வேகத்தை அவ்வப்போது கூட்டியும், குறைத்தப்படியும் நடைப்போடுங்கள். இதனால், உடல் எடை அதிகரித்து, கூடுதல் கலோரிகள் எரியும். பவர் வாக்கிங்கால், நாள் முழுக்க சுறுசுறுப்பாக இருக்க முடியும் என்பதால், இதனை காலையில் செய்ய அறிவுறுத்துகின்றனர்.
நாளை 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காசி விசுவநாத சாமி கோயில் குடமுழுக்கு திருவிழாவையொட்டி தென்காசி மாவட்டத்திலும், ஆழித்தேரோட்டத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்திலும், நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திலும், நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும்.
ட்ரம்பை கண்டித்து ஆயிரக்கணக்கானோர் US-ன் பல்வேறு நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு சார்ந்த விவகாரங்களில் ட்ரம்ப் மற்றும் மஸ்க் எடுத்த அதிரடி முடிவுகளைக் கண்டித்து 1200 இடங்களில் இப்போராட்டம் நடைபெற்றது. பணிநீக்கம், நாடுகடத்தல் மற்றும் இதர பிரச்னைகளை சுட்டிக்காட்டி கண்டன முழக்கங்கள் எழுப்பபட்டன. வரி விதிப்பால் மற்ற நாடுகளை பகைத்து கொண்ட டிரம்ப்பை சொந்த நாட்டிலும் சிக்கல் உருவாகியுள்ளது.
மியான்மர் நிலநடுக்கத்தில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை 3,455 ஆக அதிகரித்துள்ளது. 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, அந்நாட்டின் உள்நாட்டுப் போரால் 30 லட்சம் பேர் புலம் பெயர்ந்துள்ளதாகவும், 2 கோடி பேருக்கு உதவி தேவைப்படுவதாகவும் ஐ.நா. புதிய தகவலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், மியான்மர் மக்களுக்காக 442 மெட்ரிக் டன் உணவுப் பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளது.
பிரேசிலில் நடைபெற்று வரும் உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் ஹிதேஷ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். 70 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதியில் பிரான்சின் மகான் டிராரியை ஹிதேஷ் எதிர்கொண்டார். 5 -0 என அசத்தலான வெற்றியை பதிவு செய்தார். இதன் மூலம் இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை ஹிதேஷ் படைத்துள்ளார்.
ரஷ்யாவின் தாக்குதல் குறித்த அமெரிக்காவின் விமர்சனம் பலவீனமாக உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விமர்சித்துள்ளார். ரஷ்யாவின் சமீபத்திய வான்வழி தாக்குதலில் 9 குழந்தைகள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர். இதற்காகவே போர் நிறுத்தப்பட வேண்டும் என உக்ரைனுக்கான அமெரிக்க தூதர் தெரிவித்திருந்தார். இதற்கு, வலிமையான நாடான அமெரிக்காவின் கருத்து பலவீனமாக உள்ளதாக ஜெலன்ஸ்கி சாடியுள்ளார்.
தொடர் தோல்விகளை சந்தித்து வரும் SRH இன்று GTஐ எதிர்கொள்கிறது. முதல் போட்டியில் 286 ரன்களை அடித்து பிரமிக்க வைத்த SRH அதன் பின் படுதோல்விகளையே சந்தித்து வருகிறது. மறுபுறம் GT விளையாடிய 3 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. ஹைதரபாத்தில் நடைபெறும் இன்றைய போட்டி யாருக்கு சாதகமாக அமையப்போகிறது என்பதை பார்க்கலாம். நீங்க யார் பக்கம்?
Sorry, no posts matched your criteria.