news

News April 6, 2025

ராமேஸ்வரம் வர ஆவலுடன் காத்திருக்கிறேன்: மோடி

image

ராம நவமி நாளான இன்று நண்பகல் 12 மணியளவில் ராமேஸ்வரத்தில் இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதுகுறித்து அவர், அனைவருக்கும் ராம நவமி வாழ்த்துகள். பிரபு ஸ்ரீ ராமரின் ஆசீர்வாதம் எப்போதும் நம் மீது நிலைத்திருக்கட்டும். நமது அனைத்து முயற்சிகளில் நம்மை வழிநடத்தும்; இன்று ராமேஸ்வரம் வருவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

News April 6, 2025

சிக்கன் வாங்க கிளம்பிட்டீங்களா?

image

வார விடுமுறை நாளான இன்று (ஞாயிறு) சிக்கன் கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது. கொள்முதல் பண்ணைகளில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ₹87ஆக இருந்த நிலையில் இன்று ₹130க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், தோல் நீக்கிய கறிக்கோழி விலை ஒரு கிலோ ₹200க்கும் விற்பனையாகிறது. இதன் காரணமாக, மாநிலம் முழுவதும் சிக்கன் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News April 6, 2025

₹43 லட்சம் கோடியில் பிரம்மாண்ட கட்டடம்!

image

போயிங் ஆலையை விட 5 மடங்கு பெரியது. 20 எம்பையர் ஸ்டேட் கட்டடத்தை விழுங்கும் அளவுக்கு உலகின் மிகப் பெரிய கட்டடத்தை எழுப்பி வருகிறது சவுதி அரசு. சுற்றுலாவை ஈர்க்க ரியாத்தில் சுமார் ₹43 லட்சம் கோடி செலவில் 400 மீட்டர் உயரத்திற்கு எழுப்பப்பட்டு வருகிறது. ஆடம்பர ஓட்டல்கள், தியேட்டர்கள், ரூப் டாப் கார்டன்கள் என அத்தனையும் இதற்குள் இருக்குமாம். 2030க்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

News April 6, 2025

வாட்ச் மேனுக்கு இவ்வளவு வருமானமா? எப்படி?

image

உத்தரப் பிரதேசத்தின் அலிகர் மாவட்டத்தில் வாட்ச் மேனாக பணியாற்றும் ராஜ்குமார் என்பவருக்கு ₹2.2கோடி வருமான வரி நிலுவையில் உள்ளதாக அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். மாதம் ₹5,000 மட்டுமே ஊதியம் பெறும் அவர் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரது PAN எண்ணை வைத்து பல கோடிக்கு மோசடி நடைபெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்தது. எளிய மனிதர்களின் ஆதார், PAN-ஐ வைத்து நடக்கும் மோசடிகள் அதிகரித்துள்ளன.

News April 6, 2025

RR vs PBKS மேட்சின் 3 அசாத்திய ரெக்கார்ட்ஸ்!

image

➥ IPL தொடரில், ஸ்ரேயாஸ் ஐயர் 50 கேட்சுகளை பிடித்துள்ளார். 119 மேட்சுகளில் விளையாடி, இச்சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.
➥ ஜோஃப்ரா ஆர்ச்சர் தனது 50வது IPL விக்கெட்டை வீழ்த்தினார். இதுவரை 44 மேட்சுகளில், 52 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். ➥ RR அணிக்காக அதிக வெற்றிகளை பெற்ற கேப்டனாக சஞ்சு சாம்சன் மாறியிருக்கிறார். 32 வெற்றிகளைப் பதிவுச் செய்து, ஷேன் வார்னே(31) சாதனையை சஞ்சு முந்தியுள்ளார்.

News April 6, 2025

கோலிவுட்டில் அடுத்தடுத்து நடிகர்கள் மரணம்!

image

நடிகர்கள் ரவிக்குமார், ஸ்ரீதர் ஆகியோரின் அடுத்தடுத்த மரணம் கோலிவுட்டை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நேற்று முன்தினம் ‘அவர்கள்’ ரவிக்குமார்(71) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்த சோகம் மறைவதற்குள் நேற்று மாலை ‘சஹானா’ <<16006034>>ஸ்ரீதர்<<>> (62) மாரடைப்பால் காலமானார். கடந்த மாதம் 25ஆம் தேதி மனோஜ் பாரதிராஜா(48) மாரடைப்பால் உயிரிழந்தது கவனிக்கத்தக்கது. #RIP

News April 6, 2025

ராம நவமி: கொல்கத்தாவில் போலீசார் குவிப்பு!

image

மே.வங்கத்தில் ஸ்ரீராம நவமியை முன்னிட்டு 2,000க்கும் மேற்பட்ட பேரணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் மட்டும் 50 பேரணிகள் நடத்தப்படவுள்ளன. இதனால் பேரணி நடக்கும் இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்களை தடுக்க இந்து அமைப்புகளுக்கு அரசு சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. பேரணியில் எவ்வித ஆயுதங்களையும் ஏந்தி செல்லக்கூடாது என நீதிமன்றமும் அறிவுறுத்தியுள்ளது.

News April 6, 2025

₹8,300 கோடி நலத்திட்டங்களுக்கு அடிக்கல்!

image

தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடி, இன்று நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான புதிய பாம்பன் ரயில் பாலத்தைத் திறந்து வைக்கிறார். ரயில், கப்பல் போக்குவரத்தையும் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். மதியம் ராமநாதசுவாமியை தரிசிக்கும் பிரதமர் மோடி, ராமேஸ்வரத்தில் 8,300 கோடி மதிப்பிலான பல்வேறு ரயில் மற்றும் சாலைத் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

News April 6, 2025

என்ன தல இது..! தோனியின் தேவையில்லாத ரெக்கார்ட்!

image

நேற்றைய ஆட்டத்தில் தோனி, எதிர்கொண்ட 19வது பந்தில்தான் முதல் பவுண்டரியை அடித்தார். நடப்பு IPL தொடரில், ஒரு பேட்டர் தனது முதல் பவுண்டரியை அடிக்க எடுத்துக்கொண்ட அதிகபட்ச பந்துகள் இதுவே. IPLல் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து கலக்கி வரும் நிலையில், தவிர்த்திருக்க வேண்டிய ஒரு சாதனை தோனி வசமாகி இருக்கிறது. தொடர்ந்து, CSK பேட்டிங்கில் தடுமாறுவதற்கு என்ன காரணம் என நினைக்கிறீங்க?

News April 6, 2025

தலைவர், ஒருங்கிணைப்பாளர், அமைச்சர் பாஜக புது ரூட்டு!

image

தமிழக பாஜக தலைவர் விவகாரத்தில் அடுத்தடுத்து பல்வேறு தகவல்கள் வெளியாகின்றன. அண்ணாமலையை மாற்றக் கூடாது என தலைமைக்கு பல இ-மெயில்கள் பறந்துள்ளதாம். இதனால் அண்ணாமலைக்கு தலைவர், நயினாருக்கு ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு முடிவாகியுள்ளதாகத் தெரிகிறது. மேலும், அண்ணாமலை விவகாரத்தில் அதிமுகவை ஆசுவாசப்படுத்த மத்திய அமைச்சரவையில் ஒரு இடம் என்ற ஜாக்பாட்டை கொடுக்க பாஜக திட்டமிட்டுள்ளதாம். நீங்க என்ன நினைக்கிறீங்க?

error: Content is protected !!