news

News April 6, 2025

கோடை காலத்தில் அதிகம் சாப்பிட வேண்டிய உணவுகள்!

image

*கோடை காலத்தில் முலாம்பழ ஜூஸ் குடிப்பதால் கண் எரிச்சல், கண் சூடு பிரச்னையை தவிர்க்கலாம். *இளநீர் நம் உடலுக்கு தேவையான பொட்டாசியம், சோடியம், கால்சியம் சத்துகளை அளித்து உடலை காக்கிறது. *வெந்தயம் ஊற வைத்த நீரை குடித்து வர தொண்டையில் வறட்சி வராமல் தடுக்கலாம். *ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் நீர்ச்சத்து குறையாமல் வெயிலை தாங்கக் கூடிய சக்தியை தருகிறது. இதை மற்றவர்களுக்கும் பகிருங்கள்..

News April 6, 2025

புதிய உற்சாகம் பிறக்கட்டும்: பிரதமர் வாழ்த்து!

image

ராம நவமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த இனிய நாளில் ஒவ்வொருவர் வாழ்விலும் புதிய உற்சாகம் பிறக்கட்டும் என்றும் வளமான, வலிமையான மற்றும் திறன்மிகு நாடாக இந்தியா உருவாக வேண்டும் எனவும் இந்நாளில் வாழ்த்துவதாக தனது X பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். ராமர் பிறந்த இந்நாளில் ராமநாத சுவாமியை தரிசிக்க பிரதமர் மோடி இன்று ராமேஸ்வரம் வருகிறார்.

News April 6, 2025

அதிமுக நிர்வாகி ராஜா கட்சியில் இருந்து நீக்கம்!

image

மோசடி வழக்கில் சிக்கிய அதிமுக நிர்வாகி ராஜாவை கட்சியில் இருந்து நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டுள்ளார். அதிமுக கலைப் பிரிவில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்து வந்த ராஜா மீது நில அபகரிப்பு உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரவுடிகள் லிஸ்டில் உள்ள அவர் மீது இளம்பெண் ஒருவர் ₹30 லட்சம், 15 சவரன் நகையை மோசடி செய்ததாக புகார் அளித்துள்ள நிலையில், இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News April 6, 2025

மோடி IMPACT: 14 தமிழக மீனவர்கள் விடுதலை!

image

பிரதமர் மோடி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் சிறையில் இருந்த 14 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் விவகாரத்தை மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும் என இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்தார். இந்தச் சூழலில் நல்லெண்ணத்தின் அடிப்படையில் தமிழக மீனவர்களை இலங்கை அரசு விடுவித்துள்ளது. மீனவர்கள் 14 பேரும் விரைவில் தாயகம் திரும்பவுள்ளனர்.

News April 6, 2025

சில சூப்பர் கிச்சன் டிப்ஸ்…

image

➤பாகற்காயில் தயிர் ஊற்றி ஊறவிட்டு, சிறிது நேரம் கழித்து வதக்கினால் கசப்பு இருக்காது ➤தோசை மிருதுவாக இருக்க, மாவு அரைக்கும்போது வேகவைத்த அரிசியை சேர்த்து அரைக்கவும் ➤உடைத்து வைத்த தேங்காய் காய்ந்து போனால், அதில் பாலை ஊற்றி சிறிது நேரம் விட்டு பயன்படுத்தினால் புதியது போல இருக்கும் ➤எண்ணெய்யை சூடாக்கும்போது புகை வராமல் இருக்க, எண்ணெய்யில் சிறிதளவு புளியை போடுங்கள். ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க!

News April 6, 2025

மோடியை சந்திக்கிறார் செங்கோட்டையன்

image

பிரதமர் மோடியை அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் வழிபாடு செய்த அவர், விமானம் மூலம் கோவை செல்வதாக கட்சி நிர்வாகிகளிடம் முதலில் கூறியுள்ளார். ஆனால், யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல், ரகசியமாக கார் மூலம் ராமேஸ்வரம் சென்றுள்ளார். நேற்று இரவு 2வது முறையாக நிர்மலாவை அவர் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

News April 6, 2025

மகளை வன்கொடுமை செய்த தந்தைக்கு வாழ்நாள் சிறை!

image

பெற்ற மகள் என்றும் பாராமல் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரத் தந்தைக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020இல் சிறுமியை மிரட்டி 45 வயதான தந்தை வன்கொடுமை செய்தார். இந்த வழக்கை விசாரித்த சிவகங்கை போக்சோ கோர்ட் அவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை மற்றும் ₹4,100 அபராதம் விதித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ₹10 லட்சம் இழப்பீடு வழங்க மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

News April 6, 2025

நிர்மலா உடன் சந்திப்பா? வேல்முருகன் மறுப்பு

image

சென்னையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை செங்கோட்டையன் சீமான், வேல்முருகன் உள்ளிட்டோர் சந்தித்ததாக தகவல் வெளியானது. குறிப்பாக, திமுக கூட்டணியில் இருக்கும் வேல்முருகன் சந்திப்பு என்பது அரசியல் ரீதியாக பேசுப்பொருளாக மாறியது. இந்நிலையில், நிர்மலாவை தான் சந்திக்கவில்லை; இது முற்றிலும் தவறான தகவல் என்று அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

News April 6, 2025

CPIM பொதுச்செயலாளராகும் MA.பேபி!

image

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 6ஆவது தேசிய பொதுச்செயலாளராக கேரளாவை சேர்ந்த எம்.ஏ.பேபி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிபிஎம்(CPIM) மூத்த தலைவர்களில் ஒருவரான இவரது பெயரை பிரகாஷ் காரத் பரிந்துரை செய்துள்ளார். மதுரையில் நடைபெற்று வரும் அக்கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

News April 6, 2025

அமெரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த ஜாகுவார்!

image

ஆடம்பர பிரியர்களான அமெரிக்கர்களுக்கு ஆடம்பர கார் நிறுவனமான ஜாகுவார் அதிர்ச்சியைக் கொடுத்து இருக்கிறது. அதற்கு காரணம் அதிபர் டிரம்ப். வாகன உதிரி பாகங்கள் இறக்குமதிக்கு 25% வரியை அவர் விதித்ததால், அமெரிக்காவுக்கு தனது கார்களை ஏற்றுமதி செய்யப் போவதில்லை என அறிவித்துள்ளது. இத்தனைக்கும் கடந்த ஆண்டில் கால் பங்கு கார்களை அமெரிக்காவில் தான் ஜாகுவார் விற்பனை செய்திருந்தது.

error: Content is protected !!