India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்திற்கு வந்த பிரதமர் மோடி, நமது மண்ணின் கலாசாரத்தின்படி பட்டு வேட்டி அணிந்து ராமநாதசுவாமியை தரிசிக்க சென்றார். முன்னதாக மண்டபம் பகுதியில் இருந்து பாம்பன் பாலத்தை திறந்து வைத்த அவர், அதன் பின் ராமநாதசுவாமியை தரிசிக்க ராமேஸ்வரம் சென்றார். கடந்த ஆண்டு அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டைக்காக ராமேஸ்வரம் வந்தபோதும் அவர் பட்டு வேட்டி அணிந்து சென்று தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ம.பி.யில் ஒரு கிறிஸ்டியன் மிஷனரி ஹாஸ்பிடலில் பிரபல பிரிட்டிஷ் இருதய டாக்டர் வேலையில் சேருகிறார். அவரிடம் சிகிச்சை பெற்ற 7 பேர் ஒரே மாதத்தில் இறக்கின்றனர். இதனால், சந்தேகம் வர, டாக்டரின் பின்னணி விசாரிக்கப்பட்டதில், அதிர்ச்சித் தகவல் வெளியானது. நரேந்திர விக்ரமாதித்ய யாதவ் என்பவர்தான் ஜான் கெம் என்பவரின் அடையாளத்தை திருடி, ஆள்மாறாட்டம் செய்து வேலையில் சேர்ந்துள்ளார். அடப்பாவிங்களா!
வங்கக்கடலில் அடுத்த 48 மணிநேரத்திற்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் (MET) தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் எனவும் நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று (ஏப்.6) கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளது.
பிரதமர் மோடி சென்ற இலங்கையின் அனுராதபுராவிலுள்ள ஜெயா ஸ்ரீ மகாபோதி கோவில், இந்தியா – இலங்கைக்கு இடையே மகத்தான ஆன்மீக முக்கியத்துவம் கொண்ட தளமாகும். இந்த கோவிலில், அசோக சக்கரவர்த்தியின் மகள் தெரி சங்கமித்தாவால் வளர்க்கப்பட்டதாக நம்பப்படும் போதி மரம் ஒன்று உள்ளது. மேலும், கோவிலுக்கு வருகை புரிந்த மோடியின் கையில், பிரதான அர்ச்சகர் ஒரு கயிறைக் கட்டி ஆசி வழங்கினார்.
பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னான்டஸின் தாயார் கிம் ஃபெர்னாண்டஸ் ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக இன்று காலமானார். கடந்த சில வாரமாகவே ICUவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். 2022ல், இவருக்கு ஸ்ட்ரோக் ஏற்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த துக்க செய்தியை அறிந்த திரையுலகினரும், ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். RIP.
சென்னையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை, நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்ததாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார். தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில், அந்த தகவலில் உண்மை இல்லை என அவர் உறுதிபடக் கூறியிருக்கிறார். கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த மத்திய அமைச்சரை சீமானும், செங்கோட்டையனும் சந்தித்ததாக காலையில் தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய தென்னிந்தியாவின் இளம் சென்சேஷன் என்றால், அது நடிகை மமிதா பைஜூ தான். அழகிய க்ரீம் மற்றும் லைட் பச்சை கலர் ட்ரெஸில் மனதை திருடும் அழகிய போட்டோஸை அவர் இன்ஸ்டாவில் பதிவிட அது காட்டுத்தீ போல, ட்ரெண்டாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும், ‘அடப்போங்கடா… என் ஹார்ட் என்கிட்ட இல்ல’ என கமெண்ட் செய்து, லைக்ஸை பறக்கவிட்டு வருகின்றனர்.
பெங்களூருவில் சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கில் கைதான பேட்மிண்டன் பயிற்சியாளரின் செல்போனில் 8 சிறுமிகளின் நிர்வாண போட்டோக்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தை சேர்ந்த சுரேஷ் பாலாஜி, மைனர் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். பயிற்சி மையத்திற்கு வரும் சில சிறுமிகளை குறிவைத்து ஆபாச போட்டோ, வீடியோ எடுத்துள்ளான். இவனை எல்லாம் என்ன செய்வது?
தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டிற்கு எதிராக சதி நடக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டின் வலிமையை குறைக்க பாஜக அரசு துடியாய் துடிக்கிறது. இதனை முதலிலேயே உணர்ந்து குரல் கொடுத்தது நாம்தான். இதுதொடர்பாக கேள்வி எழுப்பும் நமது எம்பிக்களின் குரலை நாடாளுமன்றத்தில் நசுக்குகின்றனர் என்றும் விமர்சித்தார்.
கோயில்களில் வழங்கப்படும் அர்ச்சனை சீட்டு முதல் குடமுழுக்கு, திருப்பணிகள் என அனைத்திலும் ஊழல் நடப்பதாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார். அறநிலையத்துறையாக இல்லாமல் பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழலில் திளைத்து அறமற்ற துறையாக இருக்கிறது என்றும் விமர்சித்துள்ளார். கோயில்கள் அருகே இருக்கும் மதுக்கடைகளை மூட, அறநிலையத்துறை எடுத்த நடவடிக்கை என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.