news

News April 6, 2025

ஓய்வு குறித்து தோனி பேச்சு

image

நான் ஓய்வு பெறுகிறேனா இல்லையா என்பதை உடல்தான் தீர்மானம் செய்ய வேண்டும் என்று தோனி பேசியிருக்கிறார். 43 வயதாகும் அவர் ஓய்வு பெறப் போகிறார் என்று தகவல் பரவி வந்தது. இதுகுறித்து பேசியிருக்கும் அவர், “நான் ஆண்டுக்கு ஒருமுறைதான் விளையாடுகிறேன். அடுத்த ஆண்டு விளையாட வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிக்க இன்னும் 10 மாதங்கள் உள்ளன. அப்போது உடல் திடத்தைப் பொறுத்து முடிவு செய்யலாம்” என்றார்.

News April 6, 2025

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் யார்?

image

உலகின் சிறந்த கால்பந்து வீரர் மெஸ்ஸியா? ரொனால்டோவா? இந்த கேள்விக்கு சரியான பதில் கிடைத்ததே இல்லை. இதற்கு தற்போது பதிலளித்திருக்கும் பிரேசில் முன்னாள் வீரர் காகா, மெஸ்ஸி உலகக்கோப்பையை வென்றுவிட்டதால் எதுவும் மாறிவிடாது. நானும் உலகக் கோப்பை வென்றேன். ஆனால், தலைசிறந்த வீரர்கள் பட்டியலில் நான் இல்லை. மெஸ்ஸி ஜீனியஸ் தான். ஆனால், முழுமையான கால்பந்து வீரர் என்றால் அது ரொனால்டோ தான் என்றார்.

News April 6, 2025

இது அப்துல்கலாமின் நிலம்… மோடி உற்சாகம்

image

பாம்பன் பாலத்தை திறந்து வைத்து பேசிய PM மோடி, இது மறைந்த EX குடியரசுத் தலைவர் பாரத ரத்னா அப்துல்கலாமின் நிலம் என மகிழ்ச்சி தெரிவித்தார். அப்துல்கலாமின் வாழ்க்கை, அறிவியலும், ஆன்மீகமும் ஒன்றையொன்று பூர்த்தி செய்கின்றன என்பதை நமக்குக் காட்டியதாகவும் குறிப்பிட்டார். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான ராமேஸ்வரம், 21-ம் நூற்றாண்டின் பொறியியல் அற்புதம் மூலம் இணைக்கப்பட்டு இருப்பதாகவும் மோடி கூறினார்.

News April 6, 2025

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

News April 6, 2025

வணிகம், சுற்றுலா அதிகரிக்கும்: பிரதமர் நம்பிக்கை!

image

பாம்பனில் கட்டப்பட்ட புதிய ரயில் பாலத்தால் வணிகம், சுற்றுலா அதிகரிக்கும். வேலைவாய்ப்பும் பெருகும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். சரக்கு போக்குவரத்துக்கும் வழித்தடம் அமைக்கப்பட்டு வருவதாக கூறிய பிரதமர், கடந்த 10 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் நாடு இரட்டிப்பு வளர்ச்சியை பெற்றுள்ளதாகவும், இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன எனவும் பேசினார்.

News April 6, 2025

ரயில்வே பட்ஜெட்டில் TNக்கு ₹6,000 கோடி: பிரதமர்

image

தமிழகத்தின் பொருளாதாரம் மற்றும் தொழிற்துறை வளர்ச்சிக்கு மத்திய அரசு போதிய நிதி வழங்கி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தள்ளார். எனினும் தமிழத்தில் உள்ளவர்கள் அழுதுக் கொண்டே இருப்பதாக விமர்சித்தார். கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே பட்ஜெட்டில் TNக்கு 7 மடங்கு அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டதாகவும், தற்போதைய ரயில்வே பட்ஜெட்டில் ₹6,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

News April 6, 2025

அதிமுகவை பிளவுபடுத்த முயற்சி: செல்லூர் ராஜூ

image

நிர்மலா சீதாராமனை 2வது முறையாக செங்கோட்டையன் சந்தித்த நிலையில், பல்வேறு கருத்துகள் உலா வர தொடங்கியுள்ளன. இந்நிலையில், இருவரின் சந்திப்பை பெரிதாக்கி, அதிமுகவை பிளவுபடுத்த சிலர் முயற்சி செய்வதாக செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். அரசியல் காரணங்களுக்காக சந்திப்பு நடந்ததாக இருவரும் சொல்லவில்லை. ஆனால், சிலருக்கு அதை பற்றி பேசவில்லை என்றால் தூக்கம் வரவில்லை என சாடினார்.

News April 6, 2025

ஜியோ பயனர்களுக்கு சலுகை நீட்டிப்பு

image

IPL-லின் போது JIO தனது ப்ரீபெய்டு பயனர்களுக்கு JioHotstar-ஐ இலவசமாக வழங்குகிறது. முன்னர் பல ரீசார்ஜ்களுக்கு அறிவிக்கப்பட்ட இந்த சலுகை, ஏப்.15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், நீங்கள் ₹100/₹195/₹949 ரீசார்ஜ் செய்தால், சுமார் 90 நாள்களுக்கு இந்த செயலியை இலவசமாகப் பார்க்கலாம். ₹100க்கு ரீசார்ஜ் செய்தால் 5GB Data, ₹195க்கு 15GB Data, ₹949க்கு 84 நாட்களுக்கு 2GB Data& அழைப்புகளை பெறலாம்.

News April 6, 2025

பிரதமர் திறந்துவைத்த தூக்கு பாலத்தில் பழுது

image

பாம்பனில் பிரதமர் மோடி இன்று திறந்துவைத்த நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. தூக்கு பாலம் ஒருபுறம் ஏற்றமாகவும், மறுபுறம் இறக்கமாகவும் இருப்பதால், அதனை கீழே இறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பழுதை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். பாம்பனில் பழைய தூக்கு பாலத்திற்கு மாற்றாக ரூ.545 கோடியில் புதிய பாலம் கட்டி திறக்கப்பட்டுள்ளது.

News April 6, 2025

மோடி பங்கேற்கும் விழாவில் CM பங்கேற்கவில்லை..

image

நீலகிரி விழாவில் பங்கேற்பதால், ராமேஸ்வரத்தில் மோடி பங்கேற்கும் விழாவில் என்னால் பங்கேற்க முடியவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். இந்த சந்திப்பு நடந்தால், தொகுதி மறுசீரமைப்பால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையாது என்பதை உறுதி செய்ய, சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மோடியிடம் வலியுறுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

error: Content is protected !!