news

News April 6, 2025

பிரியாணியில் இவ்வளவு நன்மைகளா!

image

*பிரியாணியில் உள்ள வாசனைப் பொருள்கள் பசியை தூண்டுகின்றன. ஜீரணத்தை எளிதாக்கி, சத்துகளை உடல் கிரகிக்க உதவுகின்றன. *Protein, Carbohydrates, Fat மூன்றும் சரிவிகிதத்தில் உள்ளன. *சிக்கனில் உள்ள செலினியம், வயதாவதை தடுக்கிறது, நியாசின், Immunity அதிகரிக்கிறது. *மஞ்சள், இஞ்சி, மிளகு, சீரகம்: ஜீரணத்தை எளிதாக்கி, கழிவுகளை வெளியேற்றுகிறது. *காய்கறிகள் vitamins, minerals உள்ளிட்ட நுண்சத்துகளை அளிக்கிறது.

News April 6, 2025

பிரியாணி எப்போது பிரச்னை கொடுக்கும்?

image

அனைத்து சத்துகளையும், நாவூறும் சுவையையும், இழுக்கும் மணமும் கொண்டது பிரியாணி. அதேநேரம், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் சிலருக்கு ஒத்துக்கொள்ளாமல் போகலாம். டால்டா, எண்ணெய், கொழுப்பு அதிகமுள்ள இறைச்சி ஆகியவை சேர்க்கப்பட்ட பிரியாணியை அளவுக்கு மேல் சாப்பிடக் கூடாது. அதிக உப்பு, செயற்கை சுவை/ நிறமூட்டிகளை தவிர்க்கவும். உணவகங்களில் பழைய இறைச்சி பயன்படுத்தப்படுவதால், வீட்டில் சமைத்து சாப்பிடுவதே நல்லது.

News April 6, 2025

என்ன ஆகும் இந்திய பங்குச்சந்தைகள்?

image

டிரம்ப்பின் பொருளாதார முடிவுகளால் உலகம் முழுவதும் உள்ள பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டுள்ளன. வெள்ளிக்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் 1.5% சரிந்தது. ஆனால், இந்திய சந்தைகளில் வர்த்தகம் முடிந்தபின், அமெரிக்க சந்தைகள் 5% சரிவடைந்தன. அதன் தாக்கம், நாளை ( திங்கட்கிழமை) இந்திய சந்தைகளில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முதலீட்டாளர்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

News April 6, 2025

கேரள கால்பந்து ஜாம்பவான் காலமானார்…!

image

கேரளாவின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரும், ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியுமான பாபுராஜ்(60), அன்னூரில் காலமானார். கல்லூரி காலத்தில் கால்பந்து விளையாட்டிற்குள் அடியெடுத்துவைத்த அவர், மாநில அணியில் சிறந்த வீரராக செயல்பட்டுள்ளார். கால்பந்தில் நாட்டின் சிறந்த அணிகளில் ஒன்றாக கேரளம் உருவானதிலும், 1990, 91 ஆண்டுகளில் தொடர்ச்சியாக ஃபெடரேஷன் டிராபியை கேரளா வென்றதிலும் பாபுராஜ் முக்கிய பங்காற்றினார்.

News April 6, 2025

59 பேர் கொடூர கொலை…சீரியல் கில்லர் ஒப்புதல்

image

ரஷ்யாவில் வீடில்லாத மக்கள், போதைக்கு அடிமையானவர்கள், வயதானோர் என 1992 – 2006 வரை 48 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இக்கொலைகளை செய்த அலெக்சாண்டர் பிசிஸ்கின் (50) 2007இல் கைது செய்யப்பட்டார். ‘செஸ்போர்ட் கில்லர்’ என ரஷ்ய ஊடகங்களால் புனைப் பெயரில் அழைக்கப்பட்ட அவர், தற்போது மேலும் 11 பேரை கொலை செய்திருப்பதை ஒப்புக் கொண்டுள்ளார். இது ரஷ்ய போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

News April 6, 2025

ஓய்வு குறித்து தோனி பேச்சு

image

நான் ஓய்வு பெறுகிறேனா இல்லையா என்பதை உடல்தான் தீர்மானம் செய்ய வேண்டும் என்று தோனி பேசியிருக்கிறார். 43 வயதாகும் அவர் ஓய்வு பெறப் போகிறார் என்று தகவல் பரவி வந்தது. இதுகுறித்து பேசியிருக்கும் அவர், “நான் ஆண்டுக்கு ஒருமுறைதான் விளையாடுகிறேன். அடுத்த ஆண்டு விளையாட வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிக்க இன்னும் 10 மாதங்கள் உள்ளன. அப்போது உடல் திடத்தைப் பொறுத்து முடிவு செய்யலாம்” என்றார்.

News April 6, 2025

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் யார்?

image

உலகின் சிறந்த கால்பந்து வீரர் மெஸ்ஸியா? ரொனால்டோவா? இந்த கேள்விக்கு சரியான பதில் கிடைத்ததே இல்லை. இதற்கு தற்போது பதிலளித்திருக்கும் பிரேசில் முன்னாள் வீரர் காகா, மெஸ்ஸி உலகக்கோப்பையை வென்றுவிட்டதால் எதுவும் மாறிவிடாது. நானும் உலகக் கோப்பை வென்றேன். ஆனால், தலைசிறந்த வீரர்கள் பட்டியலில் நான் இல்லை. மெஸ்ஸி ஜீனியஸ் தான். ஆனால், முழுமையான கால்பந்து வீரர் என்றால் அது ரொனால்டோ தான் என்றார்.

News April 6, 2025

இது அப்துல்கலாமின் நிலம்… மோடி உற்சாகம்

image

பாம்பன் பாலத்தை திறந்து வைத்து பேசிய PM மோடி, இது மறைந்த EX குடியரசுத் தலைவர் பாரத ரத்னா அப்துல்கலாமின் நிலம் என மகிழ்ச்சி தெரிவித்தார். அப்துல்கலாமின் வாழ்க்கை, அறிவியலும், ஆன்மீகமும் ஒன்றையொன்று பூர்த்தி செய்கின்றன என்பதை நமக்குக் காட்டியதாகவும் குறிப்பிட்டார். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான ராமேஸ்வரம், 21-ம் நூற்றாண்டின் பொறியியல் அற்புதம் மூலம் இணைக்கப்பட்டு இருப்பதாகவும் மோடி கூறினார்.

News April 6, 2025

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

News April 6, 2025

வணிகம், சுற்றுலா அதிகரிக்கும்: பிரதமர் நம்பிக்கை!

image

பாம்பனில் கட்டப்பட்ட புதிய ரயில் பாலத்தால் வணிகம், சுற்றுலா அதிகரிக்கும். வேலைவாய்ப்பும் பெருகும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். சரக்கு போக்குவரத்துக்கும் வழித்தடம் அமைக்கப்பட்டு வருவதாக கூறிய பிரதமர், கடந்த 10 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் நாடு இரட்டிப்பு வளர்ச்சியை பெற்றுள்ளதாகவும், இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன எனவும் பேசினார்.

error: Content is protected !!