news

News April 6, 2025

ஞாபகம் வருதே… மீண்டும் ரிலீசாகும் ஆட்டோகிராஃப்…!

image

2K கிட்ஸுக்கு பிரேமம் படம் என்றால், 90’s கிட்ஸுக்கு ஆட்டோகிராஃப் படம். சேரன் இயக்கி நடித்து 2004-ம் ஆண்டு வெளியான இந்த படம், 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. மே 16-ல் மீண்டும் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. ‘ஞாபகம் வருதே’ முதல் ‘ஒவ்வொரு பூக்களுமே’ வரை அனைத்துப் பாடல்களும் இந்த படத்தில் ஹிட் தான். இந்த படத்தில் உங்களுக்கு பிடித்த காட்சி எது?

News April 6, 2025

தமிழில் கையெழுத்து போடுங்கள்: PM மோடி

image

தமிழக அரசியல் தலைவர்கள் தமிழில் கையெழுத்து போடுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் வைத்துள்ளார். ராமேஸ்வரம் அரசு நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழ்நாட்டில் இருந்து தனக்கு கடிதம் எழுதுபவர்களின் கையெழுத்து ஆங்கிலத்திலேயே இருப்பதாகக் குறிப்பிட்டார். தனக்கு கடிதம் எழுதும் அரசியல் தலைவர்கள், கையெழுத்தையாவது தமிழில் போடுங்கள் என அவர் அறிவுறுத்தினார்.

News April 6, 2025

Health Tips: வேர்க்கடலையில் இவ்வளவு நன்மைகளா?

image

வேர்க்கடலையில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள், நார்ச்சத்துகள், புரதங்கள் அதிகமாக உள்ளன. இவை உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதால் இதய நோய் பாதிப்பை தவிர்க்கலாம். உடலில் சர்க்கரை அளவை சீராக வைக்க வேர்க்கடலை உதவுகிறது. இதில், இருக்கும் வைட்டமின் B3 மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. வேர்க்கடலை பசியை கட்டுப்படுத்த உதவுவதால், உடல் எடையை கட்டுப்படுத்த முடியும் என சொல்லப்படுகிறது. SHARE IT.

News April 6, 2025

உங்களுக்காக ‘சஞ்சார் சாத்தி’ ஆப்!

image

போனுக்கு மோசடி call-கள் தொல்லை அதிகரித்தபடி உள்ளது. இதை தடுக்க மத்திய அரசு, ‘Sanchar Saathi’ செயலியை அறிமுகம் செய்துள்ளது. சந்தேகத்துக்கு இடமான கால் வந்தால், இந்த ஆப்பில் லாக்-இன் செய்து, நேரடியாக புகார் செய்யலாம். மொபைல் தொலைந்தால் உடனடியாக பிளாக் செய்யலாம். உங்கள் பெயரில், உங்களுக்கு தெரியாமல் போன் நம்பர் வைத்திருந்தாலும் கண்டறியலாம். போன் ஒரிஜினலா என்பதை IMEI எண் கொடுத்து செக் பண்ணலாம்.

News April 6, 2025

CPI(M) பொலிட் பீரோ உறுப்பினர்கள் தேர்வு

image

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 18 புதிய பொலிட் பீரோ உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பினராயி விஜயன், ராகவலு, M.A.பேபி, தபன் சென், நிலோத்பல் பாசு, சலீம், விஜயராகவன், அசோக் தாவலே, ராமச்சந்திரா தோமே, கோவிந்தன், அம்ரா ராம், விஜு கிருஷ்ணன், மரியம் தாவலே, வாசுகி, கே.பாலகிருஷ்ணன், ஜிதேந்திர சௌத்ரி, ஸ்ரீதீப் பட்டாச்சார்யா, அருண் குமார் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

News April 6, 2025

கேட்டது ₹37,907 கோடி… கிடைத்தது ₹522.34 கோடி…!

image

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளுக்காக ₹522.34 கோடி கூடுதல் நிதி ஒதுக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு ₹37,907 கோடி வழங்க வேண்டும் என CM ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தி இருந்தார். ஆனால், பேரிடர் நிவாரண நிதியுடன் கூடுதலாக ₹522.34 கோடி மட்டுமே வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது.

News April 6, 2025

பிரியாணியில் இவ்வளவு நன்மைகளா!

image

*பிரியாணியில் உள்ள வாசனைப் பொருள்கள் பசியை தூண்டுகின்றன. ஜீரணத்தை எளிதாக்கி, சத்துகளை உடல் கிரகிக்க உதவுகின்றன. *Protein, Carbohydrates, Fat மூன்றும் சரிவிகிதத்தில் உள்ளன. *சிக்கனில் உள்ள செலினியம், வயதாவதை தடுக்கிறது, நியாசின், Immunity அதிகரிக்கிறது. *மஞ்சள், இஞ்சி, மிளகு, சீரகம்: ஜீரணத்தை எளிதாக்கி, கழிவுகளை வெளியேற்றுகிறது. *காய்கறிகள் vitamins, minerals உள்ளிட்ட நுண்சத்துகளை அளிக்கிறது.

News April 6, 2025

பிரியாணி எப்போது பிரச்னை கொடுக்கும்?

image

அனைத்து சத்துகளையும், நாவூறும் சுவையையும், இழுக்கும் மணமும் கொண்டது பிரியாணி. அதேநேரம், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் சிலருக்கு ஒத்துக்கொள்ளாமல் போகலாம். டால்டா, எண்ணெய், கொழுப்பு அதிகமுள்ள இறைச்சி ஆகியவை சேர்க்கப்பட்ட பிரியாணியை அளவுக்கு மேல் சாப்பிடக் கூடாது. அதிக உப்பு, செயற்கை சுவை/ நிறமூட்டிகளை தவிர்க்கவும். உணவகங்களில் பழைய இறைச்சி பயன்படுத்தப்படுவதால், வீட்டில் சமைத்து சாப்பிடுவதே நல்லது.

News April 6, 2025

என்ன ஆகும் இந்திய பங்குச்சந்தைகள்?

image

டிரம்ப்பின் பொருளாதார முடிவுகளால் உலகம் முழுவதும் உள்ள பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டுள்ளன. வெள்ளிக்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் 1.5% சரிந்தது. ஆனால், இந்திய சந்தைகளில் வர்த்தகம் முடிந்தபின், அமெரிக்க சந்தைகள் 5% சரிவடைந்தன. அதன் தாக்கம், நாளை ( திங்கட்கிழமை) இந்திய சந்தைகளில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முதலீட்டாளர்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

News April 6, 2025

கேரள கால்பந்து ஜாம்பவான் காலமானார்…!

image

கேரளாவின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரும், ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியுமான பாபுராஜ்(60), அன்னூரில் காலமானார். கல்லூரி காலத்தில் கால்பந்து விளையாட்டிற்குள் அடியெடுத்துவைத்த அவர், மாநில அணியில் சிறந்த வீரராக செயல்பட்டுள்ளார். கால்பந்தில் நாட்டின் சிறந்த அணிகளில் ஒன்றாக கேரளம் உருவானதிலும், 1990, 91 ஆண்டுகளில் தொடர்ச்சியாக ஃபெடரேஷன் டிராபியை கேரளா வென்றதிலும் பாபுராஜ் முக்கிய பங்காற்றினார்.

error: Content is protected !!