India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வக்பு வாரிய திருத்தச் சட்டம் விரைவில் அரசிதழில் வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். அந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் முர்மு நேற்று ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, அது விரைவில் அரசிதழில் வெளியிடப்பட இருப்பதாகவும், அப்படி வெளியிட்ட பிறகு அது அமலுக்கு வரும் என்றும் ஜோஷி கூறியுள்ளார். இந்த சட்டம், முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் இரவு 10 மணி வரை கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று MET தெரிவித்துள்ளது. மேலும், தூத்துக்குடி, ராமநாதபுரம், சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
ஜான் விக் பட சீரிஸில் இதுவரை 4 பாகங்கள் வெளியாகியுள்ளன. நாயைக் கொன்றோரை பழிதீர்க்கவும், தன்னை காக்கவும் நாயகன் பலரை கொல்வது போன்று திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். 4-வது பாகம் நாயகன் கீனு ரீவ்ஸ் இறப்பது போன்று முடிக்கப்பட்ட நிலையில், தற்போது 5ஆவது பாகம் எடுக்கப்பட இருப்பதாகவும், இதிலும் கீனு ரீவ்ஸ்தான் நாயகன் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஜான் விக் பார்த்துட்டிங்களா? கீழே கமெண்ட் பண்ணுங்க.
2016-ல் பெண் சப் இன்ஸ்பெக்டரை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி வீசிய இன்ஸ்பெக்டர் குற்றவாளி என கோர்ட் அறிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் இன்ஸ்பெக்டர் அபய் குருந்த்கர், தன்னுடன் நெருங்கி பழகிய சப் இன்ஸ்பெக்டர் பித்ரேவுடன் தகராறு ஏற்பட்டதால் அவரை கொலை செய்துள்ளார். மேலும், உடலை துண்டுதுண்டாக வெட்டி வீசியுள்ளார். பெண்ணின் தந்தை தொடர்ந்த வழக்கில், குருந்த்கர் குற்றவாளி என கோர்ட் அறிவித்துள்ளது.
புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ள GT அணியும், கடைசி இடத்தில் உள்ள SRH அணியும் சற்றுநேரத்தில் மல்லுக்கட்ட ரெடியாகியுள்ளன. நடப்பு சீசனில் GT 3 போட்டிகளில் விளையாடி 2-ல் வெற்றி பெற்றுள்ளது. SRH 4 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. இதுவரை 5 போட்டிகளில் நேருக்குநேர் மோதி, 3-ல் GT அணியும் ஒன்றில் SRH அணியும் வெற்றி பெற்றுள்ளன. 1 போட்டியில் முடிவில்லை. இன்று வெல்லப் போவது யார்?
ப்ரீமியம் சிறப்பு ரயில்களில் டிக்கெட் கன்பர்ம் ஆகி இருந்தாலும், ஆர்ஏசி டிக்கெட் என இருந்தாலும், அது கேன்சல் செய்ய அனுமதிக்கப்படுவது இல்லை. கேன்சல் செய்ய முயன்றாலும் அதற்கான வழி இருக்காது. அதே நேரத்தில் ஏதேனும் காரணத்திற்காக அந்த ரயில் ரத்து செய்யப்படும்பட்சத்தில், டிக்கெட் தானாக கேன்சல் ஆகும். அப்போது டிக்கெட்டுக்கு நாம் செலுத்திய தொகை, உரிய பிடித்ததற்கு பிறகு திருப்பித் தரப்படும்.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகி வரும் அவதார் பட வரிசையில் ’அவதார் – Fire and Ash’ மூன்றாம் பாகம் டிசம்பர் 19ஆம் தேதி வெளியாகும் என்பதை படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதிதான் என்றாலும் இரண்டாம் பாகம் வெளியாவதில் பல முறை தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து, மூன்றாம் பாகம் திட்டமிட்டபடி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
CSK அணியின் தொடர் தோல்வி அதன் ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. அதேநேரம், தன் பக்கம் இருக்கும் பிரச்னைகளை CSK ஆய்வு செய்ய வேண்டிய நேரமிது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். இளம் வீரர்களை அணியில் சேர்க்காதது, அதிக எண்ணிக்கையிலான ஸ்பின்னர்களை கொண்டிருப்பது, ஹிட்டர்கள் யாரும் இல்லாதது என வீக்னஸ் பட்டியல் நீள்கிறது. CSK சரி செய்ய வேண்டிய தவறுகள் என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
தூத்துக்குடியில் கட்சி நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘வடமாநிலத்தவர்கள் யாரும் குளிக்கக் கூட மாட்டார்கள். ஆனால், தமிழர்கள் ஒரு நாளைக்கு 2 வேளை குளிப்பார்கள்’ என அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நின்று தமிழர்கள் நாகரிகமற்றவர்கள் என்று கூறும் அவர்களுக்கு நாகரிகம் என்றால் என்னவென்று தெரியுமா என்றும் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.
ஜோதிடப்படி, கிரக பெயர்ச்சிகளால் நன்மைகளும், சில சூழல்களில் பாதிப்புகளும் ஏற்படலாம். வரும் மே 18-ல் ராகு- கேது பெயர்ச்சி நிகழவுள்ளது. இதனால் மிதுனம், கடகம், சிம்மம், விருச்சிகம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசிகளுக்கு குடும்ப பிரச்னைகள், உடல்நலக்குறைவு மற்றும் சில பாதிப்புகள் ஏற்படக்கூடும். இதை தவிர்க்க பேச்சில் கவனம், வாக்குவாதம் தவிர்த்தல், வாகனம் ஓட்டும்போது கவனம் கடைப்பிடியுங்கள். நல்லதே நடக்கும்.
Sorry, no posts matched your criteria.