news

News December 27, 2025

தனியார் பஸ்களை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு

image

தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து TNSTC சார்பில் இயக்குவது தொடர்பான வரைவு அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, தேசியமயமாக்கப்பட்ட நெடுஞ்சாலைகளில் மட்டுமே இந்த பஸ்கள், தொலைதூர பயணங்களுக்காக இயக்கப்படும். இதன் மூலம் பண்டிகை காலங்களில் ஏற்படும் நெரிசலை குறைக்கலாம் என அரசு கூறுகிறது. இதுபற்றி பொதுமக்கள் 30 நாள்களுக்குள் கருத்து தெரிவிக்கலாம் எனவும் அரசு கூறியுள்ளது. உங்கள் கருத்து என்ன?

News December 27, 2025

உயில் எழுதவில்லை என்றாலும் சொத்து கிடைக்கும்!

image

உயில் எழுதாத ஒரு இந்துவின் சொத்துகள், 3 நிலைகளில் பிரித்தளிக்கப்படுகிறது. முதல் நிலையில் இறந்தவரின் மகன், மகள், தாய் ஆகியோருக்கு சொத்து பங்கிடப்படும். முதல் நிலை இல்லாமல் இருந்தால், 2-ம் நிலையில் உள்ள சகோதர சகோதரிகள், மருமகன்கள், மருமகள்களுக்கு அளிக்கப்படும். இவை இரண்டும் இல்லாமல் இருந்தால், 3-ம் நிலையான தந்தையின் உறவினர்கள் (அ) தாயின் உறவினர்களுக்கு சொத்து பகிர்ந்தளிக்கப்படும். ஷேர் பண்ணுங்க.

News December 27, 2025

BREAKING: திமுக அரசுக்கு அடுத்த நெருக்கடி!

image

<<18674972>>இடைநிலை ஆசிரியர்கள்<<>>, தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதுவொருபுறம் இருக்க, திமுக கூட்டணியில் உள்ள சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவனர் எர்ணாவூர் நாராயணன் வரும் தேர்தலில் தான் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிடுவதாக தன்னிச்சையாக அறிவித்து கூட்டணியில் புதிய பிரச்னையை கிளப்பியுள்ளார். இதனால், கூட்டணியில் புகைச்சல் ஏற்பட்டுள்ளது.

News December 27, 2025

அமெரிக்காவின் 20 நிறுவனங்களுக்கு சீனா தடை

image

தைவானுக்கு ஆயுதங்கள் விற்க ஒப்பந்தம் போட்டதால், USA-வின் 20 பாதுகாப்பு நிறுவனங்களுக்கு சீனா தடை விதித்துள்ளது. அண்டை நாடான தைவானை, சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இவ்விவகாரத்தில் USA, தைவானின் பக்கம் நிற்பதால், USA – சீனா இடையே பிரச்னை நிலவுகிறது. இந்நிலையில், சீனாவின் எதிர்ப்பை மீறி ₹99,822 கோடியில் தைவானுக்கு ஆயுதங்கள் விற்க டிரம்ப், பச்சைக்கொடி காட்டியது பஞ்சாயத்தை மேலும் பெரிதாக்கியுள்ளது.

News December 27, 2025

3 குழந்தைகளை பெறுவது சிறந்தது: சந்திரபாபு நாயுடு

image

உலகளவில் ஆதிக்கம் செலுத்த இந்தியாவுக்கு ஒரு பெரிய தொழிலாளர் சக்தி வேண்டும் என ஆந்திர CM சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். பொருளாதார வளர்ச்சிக்கு நாட்டின் கருவுறுதல் விகிதம் முக்கியம் என்று கூறிய அவர், RSS தலைவர் மோகன் பகவத் கூறுவதுபோல ஒவ்வொரு தம்பதியும் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார். மக்கள் தொகையில் கவனம் செலுத்தினால் 2047-க்கு பிறகும் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என்றும் கூறினார்.

News December 27, 2025

சர்வதேச சந்தையில் தங்கம் இன்று ₹4,906 உயர்ந்தது

image

சர்வதேச சந்தையில் தங்கம் விலை இன்று(டிச.27) ஒரே நாளில் இந்திய மதிப்பில் ₹4,906 உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக இந்திய சந்தையில் ஜெட் வேகத்தில் உயர்ந்து வரும் தங்கம், தற்போதைய நிலவரப்படி சவரன் ₹1,03,120-க்கு விற்பனையாகிறது. இந்த நிலையில், சர்வதேச சந்தையில் 1 அவுன்ஸ்(28g) தங்கம் $54.63(₹4,906) உயர்ந்து $4,534-க்கு விற்பனையாகிறது. கடந்த 30 நாள்களில் மட்டும் $323(₹28,821) உயர்ந்துள்ளது.

News December 27, 2025

நயினாருக்கு குருநாதரான செங்கோட்டையன்

image

செங்கோட்டையன் போய் சேர்ந்திருக்கும் இடம் எப்படி என்று தனக்கு தெரியவில்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற பரப்புரையில் பேசிய அவர், 1977-ல் KAS முதல்முறையாக ஜெயித்தது முதல் ஜெ., உடனான பயணத் திட்டங்களின்போதும் தன்னுடனே பல ஆண்டுகள் நட்புடன் பயணித்தவர் என்றார். இந்நிலையில், தன் குருநாதருக்கு வணக்கங்கள் என நயினார் பேச்சை தொடங்கினார்.

News December 27, 2025

வெறும் வயிற்றில் இந்த பழத்தை சாப்பிடலாமா?

image

வாழைப்பழங்களில் மஞ்சள், பச்சையை விட செவ்வாழை ஆரோக்கியமானது. இதை வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டால் பல நன்மைகள் உள்ளதாக டாக்டர்கள் கூறுகின்றனர். முக்கியமாக *செரிமானத்தை மேம்படுத்தும் *இதய ஆரோக்கியத்திற்கு நல்லது *எடையை கட்டுக்குள் வைக்கும் *ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் *நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் *கண், சருமத்திற்கு நல்லது *உடலுக்கு ஆற்றலை வழங்கும் *மனசோர்வை குறைக்கும்.

News December 27, 2025

பொங்கல் பரிசுத் தொகை.. காலையிலேயே ஸ்வீட் நியூஸ்

image

பொங்கல் பண்டிகைக்கு 20 நாள்களே உள்ள நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு, ஏலக்காய், முந்திரி, உலர் திராட்சை அடங்கிய பரிசுத் தொகுப்பு ஜனவரி 2-வது வாரத்திற்குள் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ₹3,000 பரிசுத் தொகை வழங்குவதற்கான அறிவிப்பையும் ஓரிரு நாள்களில் அரசு அறிவிக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

News December 27, 2025

₹18,000 சம்பளம்.. 22,000 பணியிடங்கள்: APPLY

image

இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 22,000 குரூப் டி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: 10th/ ITI. வயது வரம்பு: 18 – 33. தேர்வு முறை: கணினி வழி தேர்வு, உடற்தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை. சம்பளம்: ₹18,000 முதல். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 2026, ஜன., 21 முதல் பிப்., 20 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு இங்கே <>கிளிக்<<>> செய்யவும். Share it

error: Content is protected !!