News August 3, 2024
நாயை மீட்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

மேட்டூர் அணை பகுதியில் சிக்கியுள்ள நாயை மீட்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு அறிக்கை அளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 16 கண் பகுதியில் 5 நாள்களுக்கு முன் சிக்கிய நாயை, NDRF குழு மீட்க ஆணையிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், ட்ரோன் மூலம் நாய்க்கு உணவு வழங்குவதாகவும், நீர் வரத்து குறைந்துள்ளதால் NDRF உதவி தேவைப்படாது எனவும் தமிழக அரசு கூறியது. இதையடுத்து விசாரணை ஆக.6க்கு ஒத்திவைக்கப்பட்டது.
Similar News
News January 10, 2026
சிகரெட் பிடித்து எதிர்ப்பை தெரிவிக்கும் ஈரான் பெண்கள்

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இந்நிலையில், இளம்பெண்கள் ஈரான் உச்ச தலைவர் கமேனியின் புகைப்படத்தை தீயிட்டு, அதில் சிகரெட் பற்றவைக்கும் வீடியோக்கள் SM-ல் பரவி வருகின்றன. உச்ச தலைவர் புகைப்படத்தை எரிப்பதும், பெண்கள் சிகரெட் பிடிப்பதும் தண்டனைக்குரிய குற்றங்களாக கருதப்படும் ஈரானில், இது பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான துணிச்சலான எதிர்ப்பாக பார்க்கப்படுகிறது.
News January 10, 2026
பெண்ணை கர்ப்பமாக்கினால் ₹10 லட்சம்.. SCAM ALERT

பிஹார் சைபர் பிரிவு போலீசார் ‘பெண்ணை கர்ப்பமாக்கினால் ₹10 லட்சம் சம்பாதிக்கலாம்’ என்ற சைபர் மோசடியை முறியடித்துள்ளனர். ‘All India Pregnant Job’ என்ற பெயரில், குழந்தை இல்லாத பெண்களை கர்ப்பமாக்கினால் ₹10 லட்சம் வழங்கப்படும் என்றும், அதில் தோல்வியடைந்தால் பாதி பணம் வழங்கப்படும் என்றும் நம்ப வைத்து பணம் பறித்துள்ளனர். இந்த மோசடி குறித்த விசாரணையில், 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
News January 10, 2026
முடி உதிர்வுக்கு Full Stop; இந்த ஒரு எண்ணெய் போதும்!

முடி கொட்டும் பிரச்னையை குறைக்க பூசணி விதை எண்ணெய் பெரிதும் உதவும் என டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த விதையில் உள்ள வைட்டமின்கள் முடி உதிர்வை கட்டுப்படுத்துவதோடு, பொடுகு தொல்லை, Dry Scalp போன்ற பல பிரச்னைகளுக்கு தீர்வளிக்கும். இந்த எண்ணெயை தடவி 1 மணி நேரம் ஊறவைத்த பின்பு தலைக்கு குளியுங்கள். வாரத்திற்கு இரண்டு முறை இதை செய்தால் முடி சம்பந்தமான அனைத்து பிரச்னைகளும் நீங்கும். SHARE IT.


