News November 24, 2024
அணியுடன் சேர்ந்தார் கேப்டன் ரோஹித் ஷர்மா

கேப்டன் ரோஹித் ஷர்மா ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய அணியுடன் இன்று சேர்ந்து கொண்டார். தனக்கு இரண்டாவது குழந்தையை பிறந்திருப்பதையொட்டி மும்பையில் இருந்த அவர், முதல் டெஸ்ட் போட்டியை தவறவிட்டார். தற்போது அணியுடன் சேர்ந்திருக்கும் அவர், இரண்டாவது போட்டியில் இருந்து தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News January 10, 2026
சச்சின் பொன்மொழிகள்

*நான் என்னை எப்பொழுதும் மற்றொருவருடன் ஒப்பிட்டதில்லை. *எதிரி யாராக இருந்தால் என்ன? முதலில் மோதிப்பார். *உங்கள் கனவுகளை பின்தொடருங்கள். ஆனால், குறுக்கு வழியில் இல்லை என்பதை உறுதி செய்யுங்கள். *அனைத்து துறைகளிலும் உயர்வு தாழ்வு இருக்கும். முயற்சியை மட்டும் கைவிட்டுவிடாதீர்கள். *தேடல் முடிந்ததும்தான் தேவையை அறிவாய். *துரோகத்தை அன்பினால் வெல்லுங்கள்.
News January 10, 2026
சூர்யாவுடன் விக்ரம் மோதுகிறாரா?

தீபாவளி, பொங்கல் என தள்ளிப்போன சூர்யாவின் ‘கருப்பு’ படத்தை பிப்ரவரி 19-ல் கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே தேதியில் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ படமும் வெளியாக உள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. இரு படங்களுக்குமே எதிர்பார்ப்பு பெரிய அளவில் உள்ளதால் பிப்ரவரி மாதம் சினிமா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் காத்திருக்கிறது.
News January 10, 2026
வெனிசுலாவை மீண்டும் தாக்கப் போவதில்லை: டிரம்ப்

வெனிசுலாவில் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டதை டிரம்ப் வரவேற்றுள்ளார். மேலும் அந்நாட்டு அரசு அமைதியை நாடுவது தெளிவாகிறதாகவும், எண்ணெய் மற்றும் எரிவாயு உள்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப அமெரிக்காவும் வெனிசுலாவும் இணைந்து செயல்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். வெனிசுலாவின் ஒத்துழைப்பு காரணமாக 2-வது சுற்று தாக்குதல்களை தான் ரத்து செய்துள்ளதாகவும், அது அவசியமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.


