News March 16, 2024
வேட்பாளர்கள் ஏஜெண்டுகளை நியமிக்கலாம்
மக்களவைத் தேர்தலையொட்டி, தபால் வாக்குச் சீட்டுகளை அச்சடிக்கும் மையங்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும். தபால் வாக்குச் சீட்டுகளை அச்சடிக்கும் பணியை கண்காணிக்க வேட்பாளர்கள் தங்களின் ஏஜெண்டுகளை நியமிக்கலாம். ஒரு பண்டலுக்கு 50 வாக்குச் சீட்டுகள் என்ற அடைப்படையில் கட்டிவைத்து அடையாள எண்களை இட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
Similar News
News November 19, 2024
வாகனங்கள் பொது ஏலம்
நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு துறையின் சார்பில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வருகின்ற 27-ஆம் தேதி பொது ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏலம், நாமக்கல் தலைமை அரசு மருத்துவமனை அருகே அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
News November 19, 2024
வார்னிங் விடுத்த வானிலை மையம்
தென்மேற்கு வங்கக்கடலில் வரும் 23ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. குமரி, நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் எனவும், நாகை மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.
News November 19, 2024
பாலியல் புகாரில் சிக்கிய நடிகர் சித்திக்கிற்கு முன் ஜாமீன்!
பாலியல் புகாரில் சிக்கியுள்ள மலையாள நடிகர் சித்திக்கிற்கு உச்ச நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது. மலையாள திரையுலகில் நடிகைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாவது நீதிபதி ஹேமா அறிக்கை மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. அதன் பின்னர், பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தனர். நடிகர் சித்திக்கிற்கு எதிராக பிரபல நடிகை ஒருவர் கொடுத்த புகாரை சிறப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.