News October 19, 2025
சாப்பிட்ட உடனே வாக்கிங் செல்லலாமா?

சாப்பிட்ட பின் நடப்பது உடல்நலத்துக்கு நல்லது தான். ஆனால், சாப்பிட்ட உடனேயே அதை செய்ய வேண்டாம் என்கின்றனர் டாக்டர்கள். சாப்பிட்டவுடன் நடப்பது வயிறு உப்புசத்தை ஏற்படுத்தும். அதனால் சாப்பிட்டு குறைந்தது 10 – 15 நிமிடத்துக்கு பின் நடக்கலாம். 30 நிமிடத்துக்கு பின் வாக்கிங் செல்வது ஜீரணத்தை மேம்படுத்துவதுடன் உடல்பருமனை குறைக்கவும் உதவுமாம். பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.
Similar News
News October 19, 2025
தேர்வுக்குழுவுக்கு செமத்தியான ரிப்ளே கொடுத்த ஷமி

ஆஸி.,க்கு எதிரான ODI தொடரில் இடம்பெறாத விரக்தியில் இருந்த ஷமி, தேர்வுக்குழுவிற்கு செமத்தியான மெசேஜ் ஒன்றை தனது பவுலிங் மூலம் தெரிவித்துள்ளார். ரஞ்சி டிராபியில் உத்தரகாண்டிற்கு எதிரான முதல் போட்டியில் 7 விக்கெட்களை கைப்பற்றி அசத்தியுள்ளார். இதனால், அவரது பெங்கால் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மேலும், ஷமிக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
News October 19, 2025
ரொமான்ஸ் செய்வதற்கு மட்டும் தான் நடிகைகளா?

இந்திய சினிமாவை பொறுத்தவரை நடிகர்களுக்காக மட்டுமே படம் எடுப்பதாக நடிகை ராதிகா ஆப்தே ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். தன்னை போன்ற நடிகைகளை ரொமான்ஸ் செய்வதற்கும், கவர்ச்சி நடனம் ஆடுவதற்கு மட்டுமே பயன்படுத்தி கொள்வதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், நடிகைகளின் திறமையை இருட்டடிப்பு செய்யும் நிலைப்பாட்டை இயக்குநர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
News October 19, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 19, ஐப்பசி 2 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:31 AM – 9:00 AM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: திரையோதசி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶சிறப்பு: முகூர்த்த நாள். மாத சிவராத்திரி. நரக சதுர்த்தசி ஸ்நானம். ▶வழிபாடு: சிவபெருமானுக்கு வில்மாலை சாத்தி வழிபடுதல்.