News October 19, 2025
சாப்பிட்ட உடனே வாக்கிங் செல்லலாமா?

சாப்பிட்ட பின் நடப்பது உடல்நலத்துக்கு நல்லது தான். ஆனால், சாப்பிட்ட உடனேயே அதை செய்ய வேண்டாம் என்கின்றனர் டாக்டர்கள். சாப்பிட்டவுடன் நடப்பது வயிறு உப்புசத்தை ஏற்படுத்தும். அதனால் சாப்பிட்டு குறைந்தது 10 – 15 நிமிடத்துக்கு பின் நடக்கலாம். 30 நிமிடத்துக்கு பின் வாக்கிங் செல்வது ஜீரணத்தை மேம்படுத்துவதுடன் உடல்பருமனை குறைக்கவும் உதவுமாம். பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.
Similar News
News December 11, 2025
BREAKING: டிச.15 முதல் விருப்ப மனு: EPS

2026 தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் டிச.15 – டிச. 23 வரை விருப்ப மனு பெறலாம் என EPS அறிவித்துள்ளார். முதல் நாளான 15-ம் தேதி மட்டும் நண்பகல் 12 மணிக்கு (நல்ல நேரம்) தொடங்குகிறது. மற்ற நாள்களில் காலை 10 – மாலை 5 மணி வரை விருப்ப மனுவை பெறலாம். மேலும், மனுவில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து, தலைமை அலுவலகத்தில் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 11, 2025
விஜய்யின் ஆசைக்கு அளவில்லை: கோவி.செழியன்

தமிழக மக்களையே வென்றெடுக்க முடியாத விஜய், புதுச்சேரி மக்களை வென்றெடுப்பேன் என்பது வேடிக்கையாக உள்ளதாக அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். விஜய்யின் பேச்சு, ‘கூரை ஏறி கோழி பிடிக்காதவர், வானத்தில் ஏறி வைகுண்டத்தை காட்டுவேன்’ என்பது போன்று இருந்ததாகவும் அவர் விமர்சித்தார். மேலும், ஆசைக்கு அளவில்லை என்பதற்கு அடையாளம் நடிகர் விஜய் தான் என்றும் அவர் குறிப்பிட்டார்.
News December 11, 2025
Ro-Ko கான்ட்ராக்டை மாற்றுகிறதா BCCI?

Ro-Ko ஆகியோரின் சம்பள ஒப்பந்தத்தில் விரைவில் மாற்றம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருவரும் தற்போது A+ பிரிவில் (ஆண்டுக்கு ₹7 கோடி) உள்ளனர். ஆனால், இந்தியாவுக்காக 3 வகை கிரிக்கெட்டிலும் விளையாடுபவருக்கே இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, வரும் 22-ம் தேதி BCCI-ன் வருடாந்தர பொதுக்குழு கூட்டத்தில், இவர்களின் கான்ட்ராக்ட் மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.


