News October 1, 2025
இன்று முதல் அமலுக்கு வந்தது

*ஆன்லைன் கேமிங் தடை சட்டம் அமலுக்கு வந்தது.
*ஆதார் சேவை கட்டணங்கள் உயர்வு.
*HDFC, PNB உள்ளிட்ட வங்கிகளில் லாக்கர் ஒப்பந்தங்களை புதுப்பிக்க வேண்டும்.
*PhonePe, GPay, Paytm போன்ற செயலிகளில் Money Request கோர முடியாது.
*ரயில் டிக்கெட்டுக்கான முன்பதிவுகள் திறந்த முதல் 15 நிமிடங்களுக்கு, ஆதாருடன் இணைக்கப்பட்ட பயணிகள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். *வணிக <<17881244>>சிலிண்டர்<<>> விலை உயர்ந்தது.
Similar News
News October 1, 2025
விஜய்தான் முக்கிய காரணம்: செந்தில் பாலாஜி

போலீஸ் சொல்லியும் விஜய் கேட்காததுதான் பிரச்னைக்கு முக்கிய காரணம் என்று செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார். ஜெனரேட்டர் அறைக்குள் தவெகவினர் நுழைந்தபோதுதான், மின் விநியோகம் தடைபட்டது. ஜெனரேட்டர் ஆஃப் ஆனபோதும், தெருவிளக்குகள் அணையவில்லை; மின் விநியோகம் இருந்தது எனக் கூறிய அவர், கூட்டம் நடக்கும் இடத்திற்கு அருகே வந்தபோது விஜய் வாகனத்தின் உள்ளே சென்றது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
News October 1, 2025
கரூர் விவகாரத்தில் சதி உள்ளது: அதிமுக MP இன்பதுரை

கரூர் அசம்பாவிதம் தொடர்பாக காவல்துறை மீது நம்பிக்கை இல்லை என்றும், வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அதிமுக MP இன்பதுரை தெரிவித்துள்ளார். கரூர் விவகாரத்தில் சதி உள்ளதாகவும், அரசின் தவறே மக்கள் உயிரிழக்க காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தின் சாபக்கேடு தற்போது டிஜிபியே இல்லாதது எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
News October 1, 2025
முற்றிலுமாக முடங்கிய அமெரிக்க அரசு

செலவினங்கள் தொடர்பான மசோதா செனட் சபையில் நிறைவேறாததால், அமெரிக்கா முடங்கியுள்ளது. மசோதாவை நிறைவேற்ற 60 வாக்குகள் தேவைப்படும் நிலையில் டிரம்பின் அரசுக்கு 55 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. இதனால் அத்தியாவசிய ஊழியர்களைத் தவிர மற்ற அனைத்து பெடரல் ஊழியர்களும் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள். கடந்த 6 ஆண்டுகளில் அமெரிக்கா ஷட் டவுன் ஆவது இதுவே முதல்முறையாகும்.