News April 29, 2025
இணையத்தில் டிரெண்டாகும் #ByeByeStalin

2026-ல் திராவிட மாடல் அரசின் ‘2.0’ லோடிங் என சட்டப்பேரவையில் CM ஸ்டாலின் பேசியிருந்தார். இந்நிலையில், 2026-ல் தமிழக மக்கள் திமுகவுக்கு தக்க பாடம் புகட்டி வீட்டிற்கு அனுப்புவார்கள் என்பதோடு #ByeByeStalin என அதிமுக ஐடி விங் பதிவிட்டுள்ளது. இதனால், X பக்கத்தில் #ByeByeStalin ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. அதில், ‘2026-ல் ஒரே Version தான் அது TN AIADMK Version’ என அக்கட்சியினர் பதிவிட்டு வருகின்றனர்.
Similar News
News July 9, 2025
4 நாள்களுக்கு ஒரு தடவை தாடிக்கு டை அடித்தால்..

டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி இன்னும் சில காலம் விளையாடி இருக்க வேண்டும் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து விம்பிள்டன் போட்டியை காண வந்த அவரிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பினர். அதற்கு கோலி, 4 நாள்களுக்கு ஒரு முறை தாடிக்கு டை அடிக்க தொடங்கிவிட்டால், ஓய்வு பெற அதுவே சரியான டைம் என குறிப்பிட்டு, தான் 2 நாள்களுக்கு முன்னர் தான் டை அடித்ததாக கிண்டலாக பதிலளித்தார்.
News July 9, 2025
மருமகளுக்கு Get-out.. மகளுக்கு கட்-அவுட்டா?

செளமியாவை அரசியலுக்கு வரக்கூடாது என்று நானே கூறியதாக ராமதாஸ் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நேற்றைய பாமக கூட்டத்தில் அவரது மூத்த மகள் காந்திமதியை மேடையேற்றி அழகு பார்த்தார் மருத்துவர். இதனால் மகளுக்கு ‘Ok’ மருமகளுக்கு ‘No’வா என்று கட்சியினரும், ‘இது வாரிசு அரசியல் இல்லையா’ என திமுகவினரும் கேட்கின்றனர். அதேநேரம், காந்திமதியின் மகன் முகுந்தனின் நுழைவே தந்தை – மகன் இடையே பிரச்னை உருவாக ஒரு காரணம்.
News July 9, 2025
தமிழ்நாடு குறித்து அறியப்படாத ‘6’ முக்கிய தகவல்கள்

எண்ணற்ற சிறப்புகளை கொண்ட ‘தமிழ்நாடு’ மாநிலத்தின் பெரிதும் அறிந்திடாத சில தகவல்களை மேலே உள்ள போட்டோக்களில் பாருங்க. இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திற்கும் இல்லாத அளவிற்கு சிறப்பு நமது தமிழ்நாட்டுக்கு மட்டுமே உண்டு. மேலே கொடுக்கப்பட்டுள்ளவை கொஞ்சம் தான். இதுபோன்ற நமது மாநிலம் குறித்து உங்களுக்கு தெரிஞ்ச சில அரிய தகவல்களை கமெண்ட் செய்யவும். கெத்தாக சொல்லுங்க தமிழன்டா என!