News April 29, 2025
இணையத்தில் டிரெண்டாகும் #ByeByeStalin

2026-ல் திராவிட மாடல் அரசின் ‘2.0’ லோடிங் என சட்டப்பேரவையில் CM ஸ்டாலின் பேசியிருந்தார். இந்நிலையில், 2026-ல் தமிழக மக்கள் திமுகவுக்கு தக்க பாடம் புகட்டி வீட்டிற்கு அனுப்புவார்கள் என்பதோடு #ByeByeStalin என அதிமுக ஐடி விங் பதிவிட்டுள்ளது. இதனால், X பக்கத்தில் #ByeByeStalin ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. அதில், ‘2026-ல் ஒரே Version தான் அது TN AIADMK Version’ என அக்கட்சியினர் பதிவிட்டு வருகின்றனர்.
Similar News
News December 12, 2025
100 நாள்களுக்கு பின்னர் OTT ரிலீஸ்: திருப்பூர் சுப்பிரமணியம்

படங்கள் 28 நாள்களில் OTT-யில் வருவதால், தியேட்டர்கள் பாதிக்கப்படுவதாக திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். பட ரிலீஸ் தேதியில் இருந்து 100 நாள்களுக்கு பின்னரே OTT-யில் வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், அந்த படங்களுக்கு மட்டுமே ஒத்துழைப்பு தரவேண்டும் என தியேட்டர் ஓனர்களை அறிவுறுத்தியுள்ளார். 2026 ஜனவரியில் இருந்து பூஜை போடும் படங்களுக்கு, இது பொருந்தும் என்றும் கூறியுள்ளார்.
News December 12, 2025
ஹாட்ரிக் விக்கெட் எடுத்து நிதிஷ் ரெட்டி அசத்தல்

சையத் முஷ்டாக் அலி கோப்பையில் ஆந்திராவின் ஆல் ரவுண்டர் நிதிஷ் ரெட்டி பவுலிங்கில் கலக்கியுள்ளார். ம.பி.,க்கு எதிரான ஆட்டத்தில் ஆந்திரா அணி 112 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் எளிய இலக்குடன் களமிறங்கிய ம.பி., அணிக்கு, நிதிஷ் ரெட்டி ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அதிர்ச்சி கொடுத்தார். எனினும் 17.3 ஓவர்களில் இலக்கை எட்டி ம.பி., அணி வெற்றிபெற்றது.
News December 12, 2025
23 நாள்கள் விடுமுறை.. தமிழக அரசு அறிவிப்பு

2026-ம் ஆண்டுக்கான ரேஷன் கடை விடுமுறை நாள்களின் பட்டியலை அரசு இன்று வெளியிட்டுள்ளது. ஜன.1 (ஆங்கில புத்தாண்டு), ஜன.15, 16, 17 (பொங்கல் விடுமுறை), ஜன.26 (குடியரசு தினம்), பிப்.1 (தைப்பூசம்), மார்ச் 21 (ரம்ஜான்), ஏப்.14 (தமிழ் புத்தாண்டு), மே 1 (தொழிலாளர் தினம்), ஜூன் 26 (மொஹரம் பண்டிகை), ஆக.15 (சுதந்திர தினம்), செப்.14 (விநாயகர் சதுர்த்தி) உள்ளிட்ட 23 நாள்கள் விடுமுறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


