News April 1, 2025
2 ரன்னில் பன்ட் அவுட்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

ஐபிஎல்லில் பன்ட்டை ரூ.27 கோடிக்கு லக்னோ ஜெயன்ட்ஸ் அணி வாங்கியிருந்தது. ஆனால், டெல்லிக்கு எதிராக ரன் எடுக்காமல் டக் அவுட்டும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிராக 15 ரன்களிலும் அவுட் ஆகியிருந்தார். அதேபோல், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் 2 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து, ரூ.27 கோடி வீண் என்று சமூகவலைதளத்தில் அவரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
Similar News
News April 3, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: ஈகை ▶குறள் எண்: 225 ▶குறள்: ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின். ▶பொருள்: பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப்பிடிப்பதைவிடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்.
News April 3, 2025
சொந்த மண்ணில் இந்திய அணி எதிர்கொள்ள உள்ள அணிகள்

நடப்பு ஆண்டில் இந்தியாவில் நடைபெற உள்ள போட்டிகளின் பட்டியலை BCCI வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகளிலும், தென்னாப்பிரிக்கா அணியுடன் 2 டெஸ்ட், 3 ODI, 5 டி20 போட்டிகளிலும் விளையாட உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டி நவ.14ஆம் தேதி தொடங்குகிறது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டிகள் நவ.30ஆம் தேதி தொடங்குகிறது.
News April 3, 2025
அரசு பதவியில் இருந்து நீக்கப்படும் மஸ்க்?

எலான் மஸ்கிற்கு கொடுக்கப்பட்ட பணிகள் முடிந்ததும், அவர் சிறப்பு அரசு பணியில் (DOGE தலைவர்) இருந்து விடுவிக்கப்படுவார் என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் தெரிவித்துள்ளார். பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு தனது தொழிலில் கவனம் செலுத்தினாலும், அவர் தொடர்ந்து டிரம்பின் அதிகாரப்பூர்வமற்ற ஆலோசகராக செயல்படவே வாய்ப்புள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் கூறுகின்றன.