News August 8, 2024
புத்ததேவ் பட்டாச்சார்யா காலமானார்

மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான புத்ததேவ் பட்டாச்சார்யா (80) உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த 2000 முதல் 2011ஆம் ஆண்டுவரை முதல்வராக இருந்த அவர், முதுமை, உடல்நலக் கோளாறு காரணமாக தீவிர அரசியலில் ஈடுபட முடியாமல் இருந்து வந்தார். நாள்பட்ட நுரையீரல் தொற்றால் வீட்டிலேயே ஓய்வில் இருந்த நிலையில், இன்று அவரது உயிர் பிரிந்தது.
Similar News
News February 7, 2026
கிருஷ்ணகிரி: உயிருக்கு ஆபத்தான நிலையில் இரட்டை குழந்தைகள்

பர்கூர் அருகே, கடந்த பிப்.5 தேதி வீட்டில் விளையாடி கொண்டிருந்த 2 வயது இரட்டைக் குழந்தைகள், அங்கிருந்த எலி மருந்தை பற்பசை என நினைத்துத் தவறுதலாக உட்கொண்டனர். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர்கள், தற்போது பெங்களூரு இந்திரா காந்தி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில், அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 7, 2026
முஸ்லிம் கட்சிகளுக்கு பாராபட்சம் காட்டும் திமுக?

கூட்டணி கட்சிகளுக்கு எப்படியெல்லாம் தொகுதிகளை குறைத்து கொடுக்கலாம் என திமுக ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் 2 முஸ்லிம் கட்சிகளுக்கு (IUML, மமக) 5 தொகுதிகளை ஒதுக்கியிருந்தது திமுக. ஆனால் தற்போது 4 முஸ்லிம் கட்சிகளுக்கும் சேர்த்தே 5 தொகுதிகளை ஒதுக்க முடிவு செய்திருக்கிறதாம். இதனால் அதிருப்தியில் உள்ள முஸ்லிம் கட்சிகள், திமுக கூட்டணியை விட்டு விலகுமா என கேள்வியும் எழுந்துள்ளது.
News February 7, 2026
கூட்டணி விவகாரத்தில் CM ஸ்டாலின் முன் உள்ள சவால்கள்

பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள போதிலும் கூட்டணி விவகாரம் இன்னும் முடியாமல் உள்ளது. தங்கள் கூட்டணி வலுவாக உள்ளதாக திமுகவினர் கூறி வரும் போதிலும், காங்., விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக, மநீம என அனைவருமே கூடுதல் சீட்டுகள் கேட்டு தலைமைக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். அதற்கு புதிய கட்சியின் வருகையே காரணம் எனக் கூறப்படுகிறது. இதனை சமாளிக்க ஸ்டாலின் திமுகவில் விரைவில் குழு ஒன்றை அமைக்க உள்ளாராம்.


