News August 8, 2024
புத்ததேவ் பட்டாச்சார்யா காலமானார்

மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான புத்ததேவ் பட்டாச்சார்யா (80) உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த 2000 முதல் 2011ஆம் ஆண்டுவரை முதல்வராக இருந்த அவர், முதுமை, உடல்நலக் கோளாறு காரணமாக தீவிர அரசியலில் ஈடுபட முடியாமல் இருந்து வந்தார். நாள்பட்ட நுரையீரல் தொற்றால் வீட்டிலேயே ஓய்வில் இருந்த நிலையில், இன்று அவரது உயிர் பிரிந்தது.
Similar News
News November 29, 2025
அரிஸ்டாட்டில் பொன்மொழிகள்

*தன் எதிரிகளை வெல்பவனை விட, தன் ஆசைகளை வெல்பவனே தைரியமானவன் என்று நான் எண்ணுகிறேன்.
*அமைதி, போரை விட மிகவும் கடினமானது.
*உங்கள் மகிழ்ச்சி உங்களை மட்டுமே சார்ந்துள்ளது.
*இயற்கை, ஒரு நோக்கம் இல்லாமல் எதையுமே உருவாக்காது.
*கல்வியின் வேர்கள் கசப்பானவை, ஆனால் அதன் பழங்கள் இனிப்பானவை. *உடலை குணப்படுத்துவதற்கு முன், முதலில் மனதை குணப்படுத்த வேண்டும்.
News November 29, 2025
நக்சலிஸம் முற்றிலுமாக ஒழிக்கப்படும்: அமித்ஷா

60-வது டிஜிபிக்கள், ஐஜிக்கள் மாநாடு, ராய்ப்பூரில் நடைபெற்றது. இதில் பேசிய அமித்ஷா, அடுத்த மாநாட்டுக்குள் இந்தியாவில் நக்சலிஸம் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என சூளுரைத்துள்ளார். நக்சலிஸத்தை முற்றிலும் ஒழிக்க, பாஜக அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறினார். நக்ஸலிசத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 2014-ல் 126ஆக இருந்த நிலையில், தற்போது ]11 ஆக குறைந்துள்ளது என்றார்.
News November 29, 2025
Ro-Koவால் தூக்கமில்லாமல் இருந்துள்ளேன்: மோர்கல்

SA-க்கு எதிரான முதல் ODI, நாளை (நவ.30) ராஞ்சியில் நடைபெறவுள்ளது. இதற்காக தீவிர பயிற்சியில் இந்திய வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ரோஹித், கோலி இருவரும் ODI-ல் எப்படி விளையாடுவது என்ற அனுபவத்தை கொண்டிருப்பார்கள் என்று நம்புவதாக, பவுலிங் கோச் மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளார். தான், Ro-Ko-வுக்கு எதிராக பந்து வீசியபோதெல்லாம், பல தூக்கமில்லாத இரவுகளை கழித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.


