News April 4, 2025
லாபம் அடைந்தது BSNL

18 ஆண்டுகளுக்கு பிறகு BSNL முதல் முறையாக லாபம் ஈட்டியுள்ளது. கடந்த அக்., – டிச., காலாண்டில் ₹262 கோடி லாபம் ஈட்டியுள்ளது; அதே காலாண்டில் செயல்பாட்டு லாபமாக ₹1,500 கோடியையும் ஈட்டியுள்ளது. 2023-24ஆம் ஆண்டின் இதே காலாண்டில் அந்நிறுவனம் ₹1,262 கோடி நஷ்டத்தை சந்தித்தது. குறைந்த அளவில் ரீசார்ஜ் திட்டம் போன்ற நடவடிக்கைகளால், கடந்த 6 மாதங்களில் 55 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் BSNL-யில் இணைந்துள்ளனர்.
Similar News
News April 11, 2025
வீடுகள் விலை 9% உயர்வு.. சென்னையில் எவ்வளவு?

2024-25 நிதியாண்டில் முக்கிய நகரங்களில் வீடுகள் விலை சராசரியாக 9% உயர்ந்திருப்பதாக புராப்இக்விடி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கொல்கத்தாவில் 29%, தானேயில் 17%, பெங்களூரில் 15%, புனேயில் 10%, டெல்லி, ஹைதராபாத்தில் 5% விலை உயர்ந்துள்ளதாக கூறியுள்ளது. சென்னையில் 4% உயர்ந்துள்ளது. உங்களுக்கு சொந்த வீடு வாங்கும் திட்டம் உள்ளதா? உங்கள் ஏரியாவில் விலை எப்படி?
News April 11, 2025
அண்ணாமலையை மாற்ற நிர்ப்பந்தமில்லை: அமித் ஷா

அண்ணாமலையை மாற்ற அதிமுக நிர்ப்பந்தம் எதுவும் அளிக்கவில்லை என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். பாஜக தலைவர் தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை என எக்ஸ் பக்கத்தில் நீங்கள் பதிவிட்டபிறகே, உங்களை சந்திக்க இபிஎஸ் புறப்பட்டதாக கூறப்படுகிறதே என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு அமித் ஷா, இன்னும் அண்ணாமலைதான் தலைவராக உள்ளார், அதனால்தான் எனது அருகில் அவர் அமர்ந்துள்ளார் எனக் கூறினார்.
News April 11, 2025
1 மணி நேரம் AC ஓடினால் எவ்வளவு கரண்ட் பில் வரும்?

AC-யின் வகை, திறன், எவ்வளவு மணி பயன்படுத்துகிறீர்கள் என்பதை பொறுத்து மின் கட்டணம் மாறும். 1 மணி நேரத்திற்கு, 1 டன் AC 1 யூனிட் மின்சாரத்தையும், 1.5 டன் AC, 1.5 யூனிட் மின்சாரத்தையும் பயன்படுத்தும். 1.5 டன் AC-ஐ, ஒரு நாளைக்கு 8 மணி நேரம் பயன்படுத்தினால், மாதத்திற்கு 360 யூனிட் செலவாகும். மேலும், AC-ஐ 24°C-க்கும் குறைவாக இயக்கினால் கரண்ட் பில் அதிகரிப்பதுடன், உடல்நல பிரச்னைகளும் ஏற்படலாம்.