News April 4, 2025

லாபம் அடைந்தது BSNL

image

18 ஆண்டுகளுக்கு பிறகு BSNL முதல் முறையாக லாபம் ஈட்டியுள்ளது. கடந்த அக்., – டிச., காலாண்டில் ₹262 கோடி லாபம் ஈட்டியுள்ளது; அதே காலாண்டில் செயல்பாட்டு லாபமாக ₹1,500 கோடியையும் ஈட்டியுள்ளது. 2023-24ஆம் ஆண்டின் இதே காலாண்டில் அந்நிறுவனம் ₹1,262 கோடி நஷ்டத்தை சந்தித்தது. குறைந்த அளவில் ரீசார்ஜ் திட்டம் போன்ற நடவடிக்கைகளால், கடந்த 6 மாதங்களில் 55 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் BSNL-யில் இணைந்துள்ளனர்.

Similar News

News January 13, 2026

குமுளியில் போக்குவரத்து மாற்றம் – SP அறிவிப்பு

image

சபரிமலை மகரஜோதி விழாவை முன்னிட்டு ஜன.14.ம் தேதி மாலை 5 மணி முதல் 15.ம் தேதி காலை 8 மணி வரை அனைத்து வாகனங்களும் கம்பம் புறவழிச்சாலை, கம்பம் மெட்டு வழியாக கேரளா செல்ல வேண்டும் எனவும். சபரிமலையில் இருந்து திரும்பும் பக்தர்கள் பம்பை, குட்டிக்காணம், பீர்மேடு, வண்டிப்பெரியாறு, குமுளி, கூடலூர், கம்பம் வழியாகத் திரும்பும் விதமாகவும் போக்குவரத்து மாற்றம் செய்து தேனி எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.

News January 13, 2026

இனி வேலைக்கு ஆட்கள் எடுப்பது ஈஸி

image

சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! WAY2NEWS செயலியில் இப்போது ‘உள்ளூர் வேலைவாய்ப்புகள்’ அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் நிறுவனத்திற்குத் தேவையான ஆட்களை நேரடியாகத் தேர்வு செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு. உங்கள் உள்ளூர் வேலை விளம்பரங்களைப் பதிவிட இப்போதே கீழே உள்ள <>படிவத்தைக் கிளிக்<<>> செய்யுங்கள். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News January 13, 2026

ஸ்டிரைக் அறிவிப்பு.. தமிழக அரசுக்கு புதிய நெருக்கடி

image

தூய்மைப் பணியாளர்கள், ஆசிரியர்கள், ஊராட்சி செயலாளர்களை தொடர்ந்து, தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்க சத்துணவு ஊழியர்களும் தயாராகி வருகின்றனர். சிறப்பு காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8-ம் தேதி அடையாள போராட்டத்தை நடத்தினர். இந்நிலையில், பொங்கல் விடுமுறை முடிந்தவுடனே ஜன.20-ம் தேதி முதல், வேலை நிறுத்தம் செய்யப்போவதாக சத்துணவு ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

error: Content is protected !!