News October 13, 2025
கட்டி பிடித்ததற்கு ₹3.72 லட்சம் கேட்ட மணப்பெண்

நிச்சயம் பண்ணிட்டா உடனே கல்யாணத்த முடிச்சிரனும், இல்லைனா சண்ட போட்ருவாங்க என்ற பேச்சு சீனாவில் உண்மையாகியுள்ளது. நிச்சயதார்த்தம் முடிந்த பெண், தனக்கு கணவராக வருபவர் மிகவும் நேர்மையாக உள்ளார், வருமானம் குறைவாக உள்ளது என கூறி திருமணத்தை நிறுத்தியுள்ளார். மாப்பிள்ளை வீட்டார் செய்த ₹24.83 லட்சத்தை திருப்பி தர சம்மதித்த மணப்பெண், தன்னை கட்டி பிடித்ததற்காக ₹3.72 லட்சத்தை மாப்பிளையிடம் கேட்டுள்ளாராம்.
Similar News
News October 13, 2025
தீபாவளி ட்ரீட் கொடுக்கும் ‘கருப்பு’

‘கருப்பு’ படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை என அப்படத்தின் இயக்குநர் ஆர்ஜே பாலாஜி தெரிவித்துள்ளார். இன்னும் கிராஃபிக்ஸ் பணிகள் நிறைவு பெறவில்லை எனவும், தீபாவளிக்கு முதல் பாடல் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், படம் நன்றாக வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார்.
News October 13, 2025
IPL-ல் இருந்து ஓய்வு பெறும் கோலி?

IPL-ல் இருந்து கோலி விரைவில் ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. RCB அணியுடன் விளம்பர ஒப்பந்தம் செய்துள்ள முன்னணி பிராண்ட் ஒன்று, கோலியை விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்ய அணுகியுள்ளதாம். ஆனால், பிற வீரர்களுக்கு அந்த ஒப்பந்தத்தை கொடுக்க அவர் அறிவுறுத்தினாராம். அடுத்த மெகா ஏலம் நடக்கும் போது அவருக்கு 38 வயதாகியிருக்கும். இதனால், இன்னும் 2 சீசன்களில் மட்டுமே விளையாடுவார் என்று கூறப்படுகிறது.
News October 13, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 13, புரட்டாசி 27 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:15 AM -7:15 AM & 4.45 PM – 5.45 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 PM – 12:00 PM ▶குளிகை: 1:30 AM – 3:00 AM ▶திதி: சப்தமி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: தேய்பிறை