News October 8, 2024

லஞ்சம் ஒழிப்புத்துறைக்கே லஞ்சம்

image

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிக்கே லஞ்சம் கொடுக்க முயன்ற ஷாக் சம்பவம் சேலத்தில் நிகழ்ந்துள்ளது. கந்தம்பட்டியில் உள்ள மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சதாசிவம் என்பவர் அதிகாரியாக பணியாற்றி வந்தார். தன்னுடைய அலுவலகத்திற்கு ரெய்டு வரும் முன் அலர்ட் செய்தால் மாதம் ₹50,000, முன்பணமாக ₹1 லட்சம் தருவதாக அவர் பேரம் பேசியுள்ளார். லஞ்சம் கொடுக்க வர சொல்லி அவரை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர்.

Similar News

News August 6, 2025

இனி சாரா டெண்டுல்கர் ஆஸி. அரசின் Brand Ambassador!

image

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் ஆஸ்திரேலிய சுற்றுலா துறையின் Brand Ambassador-ஆக தேர்வாகியுள்ளார். இன்ஸ்டாவில் மில்லியன் கணக்கில் ஃபாலோயர்களை கொண்டுள்ள அவருக்கு சோஷியல் மீடியாவில் நல்ல வரவேற்பும் உள்ளது. இதனால், இந்தியர்களை அதிக அளவில் ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து வரும் முயற்சியாக, $130 மில்லியன் மதிப்பிலான திட்டத்திற்காக சாராவை ஆஸி. அரசு தேர்வு செய்துள்ளது.

News August 6, 2025

Way2News வினாடி வினா கேள்வி பதில்கள்..

image

<<17318709>>பதில்கள்<<>>:
1. தொல்காப்பியம்
2. பேரீச்சை மரம்
3. உத்திர பிரதேசம்- சுசேதா கிருபளானி (2 அக். 1963- 13 மார்ச் 1967) காங்கிரஸ்
4. காதிற்குள் அமைந்துள்ளது. பெயர்- ஸ்டேப்ஸ் எலும்பு
5. 9.
நீங்க இவற்றில் எத்தனை கேள்விக்கு சரியாக பதில் சொன்னீங்க?

News August 6, 2025

திமுகவில் இணைந்தார் கார்த்திக் தொண்டைமான்

image

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புதுக்கோட்டை அதிமுக EX MLA கார்த்திக் தொண்டைமான் திமுகவில் இணைந்துள்ளார். EPSயின் நம்பிக்கைக்குரியவராக பார்க்கப்பட்டவர். தற்போது, இபிஎஸ் போகிற போக்கே சரியில்லை; மதவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் அதிமுக செயல்படுவதாக குற்றஞ்சாட்டி திமுகவில் ஐக்கியமாகியுள்ளார். அவரின் வருகை புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுகவுக்கு பலமாக பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!