News March 19, 2024

Breaking: தமிழிசை-க்கு பதில் ஆளுநராக தமிழர் நியமனம்

image

தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் பதவியை தமிழிசை நேற்று ராஜினாமா செய்வதாக குடியரசுத் தலைவருக்கும் கடிதம் அனுப்பி இருந்தார். அவரின் ராஜினாமாவை ஏற்று, தெலங்கானா & புதுச்சேரி ஆளுநர் பொறுப்பை சி.பி.ராதாகிருஷ்ணன் ( ஜார்கண்ட் ஆளுநர்) கூடுதலாக கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் முர்மு அறிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதால், தமிழிசை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 9, 2025

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை நிலவரம்!

image

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் (NECC) கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.6.10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தீவன மூலப்பொருட்களின் விலை உயர்வு, மழை மற்றும் குளிர் போன்ற பல்வேறு காரணங்களால் இந்த விலை உயர்வு எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் மேலாக இந்த விலை நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

News December 9, 2025

₹4,000 தரும் PM யாசஸ்வி திட்டம்.. அவகாசம் நீட்டிப்பு

image

பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ₹4,000 வழங்கும் PM யாசஸ்வி உதவித் தொகை திட்டத்திற்கான புதுப்பித்தல், புதிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. டிச.15 வரை <>http://scholarships.gov.in<<>> இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் மூலம் 9, 11-ம் வகுப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

News December 9, 2025

விஜய்க்கு அரசியல் தெரியாது: நயினார் நாகேந்திரன்

image

புதுச்சேரிக்கு வளர்ச்சி திட்டங்களை மத்திய அரசு கொண்டு வரவில்லை என குற்றஞ்சாட்டிய விஜய்யை நயினார் கடுமையாக விமர்சித்துள்ளார். ஒரு கவுன்சிலர் கூட ஆகாமல் நேரடியாக CM அரியணையில் அமர்வதற்கு விஜய் ஆசைப்படுவதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத், ஜல் ஜீவன் உள்ளிட்ட திட்டங்கள் தொடர்பாகவும், அரசியல் பற்றியும் விஜய்க்கு ஏதாவது தெரியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!