News March 27, 2024
BREAKING: முதல் வெற்றியை பெற்றது SRH அணி

MI அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், SRH அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. 17ஆவது ஐபிஎல் தொடரின் 8ஆவது போட்டியில், டாஸ் வென்ற SRH அணி அதிரடியாக ஆடி 277/3 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 278 ரன்கள் என்ற இலக்கை துரத்திய MI அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 246 ரன்கள் மட்டுமே எடுத்து போராடி தோல்வியடைந்தது.
Similar News
News February 7, 2026
மன அழுத்தத்தை குறைக்கும் பொழுதுபோக்குகள்!

*ஓவியம் வரைவது, இசைக்கருவிகளை வாசிக்க கற்றுக்கொள்வது மகிழ்ச்சி ஹார்மோனான டோபமைனை வெளியிட்டு மனதை நிம்மதியடைய செய்யும். *செடி வளர்ப்பில் ஈடுபடுவது, நடைபயிற்சி செய்வது மனஅழுத்த ஹார்மோன் கார்டிசோலின் அளவைக் குறைக்கிறது. *பழங்கால/பழைய பொருள்களை பழுதுபார்த்து அதன்மீது வண்ணம் தீட்டுவது கவன ஆற்றலை அதிகரிக்கிறது. *பழங்கால முத்திரைகள், நாணயங்கள் சேகரிப்பு மூலம் சுய ஒழுக்கம், பொறுமை வளர்கிறது.
News February 7, 2026
TTV தினகரன், சசிகலா மோதலுக்கு காரணம் என்ன?

சசிகலாவை சந்தித்த அமமுக <<19072313>>மாநில நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கி<<>> TTV தினகரன் அறிவித்தார். அதன் பின்னரே, TTV தினகரன், சசிகலா இடையிலான பனிப்போர் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 2017-ல் அமமுகவை தொடங்கிய TTV, சசிகலா குறித்து அதிகம் பேசி வந்தார். ஆனால், 2021-க்கு பிறகு அதனை குறைத்து கொண்டார். 2021 பேரவைத் தேர்தலில் அமமுகவுக்கு பிரசாரம் செய்ய TTV அழைத்தபோது சசிகலா மறுத்ததே அதற்கு காரணம் என கூறப்படுகிறது.
News February 7, 2026
சிகரெட்டை விட ஆபத்தானது இந்த உணவு!

சிகரெட்டுகளை போல அதிகப்படியான பதப்படுத்தப்பட்ட உணவுகளும் கூல் டிரிங்ஸ், பிஸ்கட்கள் உடலுக்கு கேடு விளைவிக்கும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சிகரெட் பிடிப்பதை நிறுத்துவது எவ்வளவு கடினமோ, அதேபோல் இந்த உணவுகளை தவிர்ப்பது சவாலானது என்பதும் தெரியவந்துள்ளது. இதனால் சிகரெட் பாக்கெட்கள் போல, ஜங்க் உணவுகளிலும் எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


