News March 27, 2024
BREAKING: முதல் வெற்றியை பெற்றது SRH அணி

MI அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், SRH அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. 17ஆவது ஐபிஎல் தொடரின் 8ஆவது போட்டியில், டாஸ் வென்ற SRH அணி அதிரடியாக ஆடி 277/3 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 278 ரன்கள் என்ற இலக்கை துரத்திய MI அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 246 ரன்கள் மட்டுமே எடுத்து போராடி தோல்வியடைந்தது.
Similar News
News December 23, 2025
சென்னையில் 15,000 போலீசார் பாதுகாப்பு

கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. சென்னையில் பொதுமக்கள் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் கொண்டாட போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சென்னை முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் போலீஸ் கமிஷனர் அருண் தலைமையில் செய்யப்பட்டுள்ளன.
News December 23, 2025
தமிழகத்தில் பொங்கல் பரிசு.. அறிவித்தார் அமைச்சர்

பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், ஜன.6-ம் தேதிக்குள் பொங்கல் பரிசாக ரேஷன் கடைகளில் இலவச வேட்டி, சேலைகள் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார். ரொக்கத் தொகையுடன் பச்சரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு வழங்கும் அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News December 23, 2025
ஸ்டார்பக்ஸ் தலைமை பொறுப்பில் தமிழர்

சுந்தர் பிச்சை, சத்யா நாதெள்ளா என உலக அளவில் உள்ள பெருநிறுவனங்களின் தலைமை பொறுப்பில் இந்தியர்கள் அசத்தி வருகின்றனர். அந்தவரிசையில் இணைந்துள்ளார் இந்திய வம்சாவளியான ஆனந்த் வரதராஜன். ஸ்டார்பக்ஸ், தனது புதிய தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக (CTO) ஆனந்தை நியமித்துள்ளது. சென்னை IIT பட்டதாரியான இவர், அமேசான் நிறுவனத்தில் 19 ஆண்டுகள் பணியாற்றியவர். வரும் ஜன.19-ம் தேதி அவர் தனது புதிய பொறுப்பை ஏற்கவுள்ளார்.


