News October 11, 2025

BREAKING: சிலியில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி வார்னிங்!

image

சிலி நாட்டின் கேப் ஹார்ன் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. மேலும், தென் அமெரிக்கா மற்றும் அண்டார்டிகாவுக்கு இடைப்பட்ட பகுதியான டிரேக்கிலும் நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில், பசிபிக் பெருங்கடல் எல்லைகளில் சிலி நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 6 பேர் உயிரிழந்தனர்.

Similar News

News October 11, 2025

பிரஸ்மீட்டில் பெண்களுக்கு இடமில்லையா?

image

டெல்லியில் நேற்று நடந்த தாலிபன் அமைச்சர் அமீர் கான் முத்தகியின் செய்தியாளர்கள் சந்திப்பில், பெண் செய்தியாளர்கள் அனுமதிக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மண்ணில் தாலிபன்களின் பெண் ஒதுக்கல் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆப்கனில் பெண்கள் படிக்கவும், வேலை செய்யவும், பொதுவெளியில் நடமாடவும் தாலிபன்கள் கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News October 11, 2025

சீனாவிற்கு 100% வரி.. வர்த்தக போரை அறிவித்த டிரம்ப்

image

சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு டிரம்ப் 100% வரிவிதித்துள்ளார். இந்த புதிய வரிவிதிப்பு வரும் நவ.1 முதல் அமலாகும் எனவும், வர்த்தகத்தில் ஆணவப்போக்குடன் செயல்படும் சீனாவால் உலகின் அனைத்து நாடுகளும் பாதிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். தங்களது அரிய கனிம வளங்களை ஏற்றுமதி செய்ய சீனா கடும் கட்டுப்பாடுகள் விதித்த நிலையில், டிரம்ப் இவ்வாறு அறிவித்துள்ளார்.

News October 11, 2025

ரஜினி, கமல் படங்களின் கேமராமேன் பாபு காலமானார்

image

MGR, சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்டோரின் முக்கிய படங்களில் கேமராமேனாக பணியாற்றிய பாபு(88) மாரடைப்பால் காலமானார். அவரது உடல் பெசன்ட் நகரில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ரஜினியின் முரட்டுக்காளை, கழுகு, பாயும் புலி, கமல்ஹாசனின் தூங்காதே தம்பி தூங்காதே, சகலகலா வல்லவன் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். சில படங்களில் நடிகராகவும் இருந்தார். பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். #RIP

error: Content is protected !!