News September 29, 2025
BREAKING: கரூர் சம்பவம்.. 3 பேர் அதிரடி கைது

கரூர் சம்பவம் தொடர்பாக சோசியல் மீடியாவில் வதந்தி பரப்பியதாக BJP-ன் சகாயம், தவெகவை சேர்ந்த சிவனேஸ்வரன், சரத்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர். பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக வதந்தி பரப்பும் வகையில் செய்திகளை பதிவிட்ட 25 சோசியல் மீடியா கணக்குகள் வைத்துள்ள நபர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது கவனிக்கத்தக்கது.
Similar News
News September 29, 2025
இந்தியாவில் டிரெண்டாகும் ‘ஸ்லீப் டூர்’

இந்தியாவில் ‘ஸ்லீப் டூர்’ அதிகரித்து வருகிறது. இன்றைய சுற்றுலா பயணிகள், டூரிஸ்ட் ஸ்பாட்டுகளை சுற்றிப் பார்ப்பதை விட, ஓய்வு எடுக்கவே அதிகம் விரும்புகின்றனர். ஏற்கெனவே, வாழ்க்கை ஓட்டத்தில் இருக்கும் மக்கள், சுற்றுலா என்ற பெயரில் மீண்டும் அலைந்து திரிந்து சோர்வு அடைய விரும்புவதில்லை. அவர்கள் தேடுவதெல்லாம் ஒரு அமைதியான இடம். நீங்க எந்த மாதிரி சுற்றுலா பயணி? கமெண்ட்ல சொல்லுங்க.
News September 29, 2025
கரூரில் 41 பேர் உயிரிழந்தது எப்படி? Postmortem Report

கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தோரின் உடற்கூராய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில், 25 பேர் 2 – 3 நிமிடங்கள் வரை மூச்சுத் திணறல் ஏற்பட்டு துடிதுடித்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மேலும், 10-க்கும் மேற்பட்டோர் நெரிசலில் சிக்கியதில் மிதிபட்டு விலா எலும்புகள் முறிந்து பலியானது மருத்துவ அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. கூட்டமான இடங்களுக்கு செல்வோர் எப்போதும் ஜாக்கிரதையாகவே இருங்கள். SHARE IT.
News September 29, 2025
கரப்பான் பூச்சியை ஒழிக்க… ஈஸி டிப்ஸ்!

டாய்லெட் முதல் கிச்சன் வரை எல்லா பக்கமும் தொல்லை கொடுப்பது கரப்பான் பூச்சி. இதை ஒழிக்க இந்த யோசனையை ட்ரை பண்ணுங்க. *ஒரு முட்டை வெள்ளைக் கருவில் 2 ஸ்பூன் போரிக் ஆசிட் பவுடர், 2 ஸ்பூன் கோதுமை மாவு சேர்த்து கெட்டியாக பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். *இந்த உருண்டைகளை கரப்பான் வரும் இடங்கள், அட்டைப் பெட்டிகள், மூலைகளில் வைத்தால் அவற்றின் தொல்லை முழுமையாக நீங்கும். SHARE IT!