News September 29, 2025

BREAKING: கரூர் சம்பவம்.. 3 பேர் அதிரடி கைது

image

கரூர் சம்பவம் தொடர்பாக சோசியல் மீடியாவில் வதந்தி பரப்பியதாக BJP-ன் சகாயம், தவெகவை சேர்ந்த சிவனேஸ்வரன், சரத்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர். பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக வதந்தி பரப்பும் வகையில் செய்திகளை பதிவிட்ட 25 சோசியல் மீடியா கணக்குகள் வைத்துள்ள நபர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது கவனிக்கத்தக்கது.

Similar News

News November 8, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துவினையாடல்
▶குறள் எண்: 513
▶குறள்:
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு.
▶பொருள்: நிர்வாகத்தின் மேல் அன்பு, நிர்வாகத்திற்கு நன்மை தருவதை அறியும் அறிவு, அதற்கான செயல்களைச் செய்யும்போது உறுதி, பணியில் பொருள் வந்தால் அதன்மீது ஆசை இன்மை இந்த நான்கையும் உடையவனிடத்தே பதவி தருவதுதான் தெளிவு.

News November 8, 2025

அதிமுக தொண்டர்கள் கண்ணீர் விடுகின்றனர்: OPS

image

அதிமுக ஒன்றுபட வேண்டுமென 2 கோடி தொண்டர்களும் கண்ணீர் விட்டு அழுகின்றனர் என OPS கவலை தெரிவித்துள்ளார். சொந்த விருப்பு, வெறுப்பாக கட்சி ஒன்றுபடுவதை தடுக்கிறார் என்றும், அதிமுக ஒன்றுபட வேண்டுமென PM மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் நினைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எம்.ஜி.ஆர் உருவாக்கிய விதியை மாற்றியவர் தான் EPS என்று OPS சாடியுள்ளார். மேலும், அதிமுகவில் சேர எந்த பதவியையும் கேட்கவில்லை என்று பேசியுள்ளார்.

News November 8, 2025

பைசனை போற்றிக் கொண்டாட வேண்டும்: சீமான்

image

‘பைசன்’ வெறும் பொழுதுபோக்கு படமல்ல, போற்றிக் கொண்டாட வேண்டிய சீர்திருத்த படம் என்று சீமான் பாராட்டியுள்ளார். பைசனை பார்த்த போது ஒரு திரைப்படம் கண் முன் ஓடிக்கொண்டிருக்கிறது என்ற உணர்வே வரவில்லை என்றும், சக மனிதர்களின் வாழ்வியலாகவே கதைக்களம் முழுவதும் மனம் ஒன்றிப்போனதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ‘பைசன்’ படத்தால் துருவ் விக்ரமின் ரசிகனாகவே மாறிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!