News October 10, 2025
BREAKING: தங்கம் விலை மளமளவென குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக்.10) ஒரே நாளில் சவரனுக்கு ₹1,320 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹11,260-க்கும், சவரன் ₹90,080-க்கும் விற்பனையாகிறது. கடந்த சில நாள்களாக தாறுமாறாக அதிகரித்து வந்த நிலையில், திடீர் சரிவைக் கண்டுள்ளது. கடந்த 9 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹4,200 அதிகரித்திருந்தது கவனிக்கத்தக்கது.
Similar News
News October 10, 2025
கரூர் துயரத்திற்கு போலீஸ் தடியடியும் காரணம்: மனுதாரர்

கரூரில் நெரிசல் ஏற்பட காவல்துறை தடியடி நடத்தியதும் காரணம் என SC-ல், கூட்டத்தில் உயிரிழந்த 13 வயது சிறுவனின் தந்தை பன்னீர்செல்வம் கூறியுள்ளார். வழக்கை CBI-க்கு மாற்றக்கோரி அவர் தொடர்ந்த வழக்கின் விசாரணையின்போது, கூட்ட நெரிசல் ஏற்படும் என ADMK-வுக்கு தர மறுத்த இடத்தை TVK-க்கு காவல்துறை ஒதுக்கியது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும், SIT விசாரணையில் உண்மை வெளிவராது எனவும் குற்றம்சாட்டினார்.
News October 10, 2025
BREAKING: தங்கம் விலை தாறுமாறாக மாறியது

<<17964410>>காலையில் இன்ப அதிர்ச்சி<<>> கொடுத்த தங்கம் விலை, மதியம் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதாவது, காலையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹1,320 குறைந்திருந்தது. ஆனால், காலையில் இருந்த விலையைவிட, இப்போது ₹640 அதிகரித்துள்ளது. தற்போது, 22 காரட் தங்கம் 1 கிராம் ₹11,340-க்கும், ₹1 சவரன் ₹90,720-க்கும் விற்கப்பட்டு வருகிறது. தங்கம் விலை ஏறுமுகத்தில் இருப்பது நடுத்தர மக்களுக்கு கவலையளித்துள்ளது.
News October 10, 2025
‘PRESTIGE’ டி.டி.ஜெகநாதன் காலமானார்

பிரபல தொழிலதிபர் டி.டி.ஜெகநாதன்(82) இன்று பெங்களூருவில் காலமானார். சென்னை ஐஐடியில் படித்த இவர், TTK நிறுவனத்தை ‘PRESTIGE’ பிராண்ட் உள்பட ₹8,800 கோடி மதிப்புள்ள பெரும் நிறுவனமாக உருவாக்கினார். இவர் அறிமுகம் செய்த கேஸ்ட்கெட் ரிலீஸ் சிஸ்டம் கொண்ட குக்கர், இந்திய சமையலறைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் ‘இந்திய கிச்சன் கிங்’ என்று புகழப்படுகிறார். RIP