News October 9, 2025

BREAKING: தங்கம் விலை வரலாறு காணாத மாற்றம்

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக்.9) சவரனுக்கு ₹120 அதிகரித்துள்ளது. இதனால் வரலாறு காணாத புதிய உச்சமாக 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹11,400-க்கும், சவரன் ₹91,200-க்கும் விற்பனையாகிறது. தங்கத்தை பொறுத்தவரையில் கடந்த 9 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹4,320 அதிகரித்துள்ளது. இது தொடர்பாக தங்க நகை வியாபாரிகளிடம் கேட்டபோது வரும் நாள்களிலும் விலை உயரும் என கூறியுள்ளனர்.

Similar News

News October 9, 2025

இன்று ஒரே நாளில் ₹1,000 விலை மாறியது

image

<<17954827>>தங்கத்துடன்<<>> போட்டிப் போட்டுக்கொண்டு வெள்ளி விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில், இன்று(அக.9) வெள்ளி கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹171-க்கு விற்பனையாகிறது. பார் வெள்ளி ₹1 கிலோவுக்கு ₹1,000 அதிகரித்து ₹1,71,000 ஆக விற்பனையாகிறது. தங்கத்தை போல வெள்ளியிலும் முதலீடுகள் அதிகரிப்பதால் விலை அதிகரித்து வருவதாக பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

News October 9, 2025

இருமல் சிரப் வழக்கில் 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்!

image

கோல்ட்ரிப் இருமல் சிரப் விவகாரத்தில், முறையாக ஆய்வு செய்யாத 2 மூத்த மருந்து தர ஆய்வாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அதோடு, ஓரிரு நாட்களில் Coldrif சிரப்பை தயாரித்த நிறுவனத்தை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார். முன்னதாக, பார்மா நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News October 9, 2025

இந்தியாவுடன் போர் ஏற்பட வாய்ப்பு: பாக். அமைச்சர்

image

இந்தியாவுடன் போர் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா தெரிவித்துள்ளார். பதற்றங்களை அதிகரிக்க விரும்பவில்லை எனவும், ஆனால் போர் வந்தால், கடந்த காலங்களை விட பாகிஸ்தான் சிறப்பான பதிலடியை கொடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட, தற்போது பாகிஸ்தானுக்கு அதிக நாடுகள் ஆதரவு தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!