News March 29, 2024
BREAKING: புதிய அறிவிப்பை வெளியிட்டது திமுக

திருவள்ளூர் தொகுதிக்கான வாக்குறுதிகளை திமுக வெளியிட்டுள்ளது. பொன்னேரி அரசு மருத்துவமனை முதல்தர மருத்துவமனையாக மாற்றப்படும். இளைஞர்கள், பெண்களுக்கு 50% வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். விம்கோ நகரில் இருந்து மீஞ்சூர் வரை மெட்ரோ சேவை விரிவுப்படுத்தப்படும். மீனவர் சமூக மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவர். மீனவர்களுக்கு தடையற்ற தொலைத்தொடர்பு வசதி ஏற்படுத்தி தரப்படும் என அறிவித்துள்ளது.
Similar News
News April 11, 2026
விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ரோந்து விவரம் வெளியீடு!!!

விழுப்புரம் மாவட்டத்தில் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News April 11, 2026
ரயில்களில் பெண்களுக்கு இடஒதுக்கீடு உள்ளதா?

ரயில்களில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவது உங்களுக்கு தெரியுமா? இந்த இடஒதுக்கீட்டின் கீழ் 12 வயதுக்கும் குறைவான சிறுவர்களுக்கும் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். இந்த டிக்கெட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். பெரும்பாலான ரயில்களில் 6 அல்லது 12 டிக்கெட்டுகள் இதுபோன்று வழங்கப்படுகின்றன. 2-ம் வகுப்பு படுக்கை வசதி, இருக்கை வசதியில் மட்டுமே இந்த இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.