News October 1, 2025

BREAKING: அகவிலைப்படி உயர்வு.. மத்திய அரசு அறிவிப்பு

image

தீபாவளி பரிசாக, அகவிலைப்படி(DA) உயர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்றைய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, DA 55%-ல் இருந்து 58% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஜூலை 1-ம் தேதியில் இருந்து கணக்கிட்டு நிலுவையுடன் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு DA உயர்வு வழங்கப்பட உள்ளது. SHARE IT.

Similar News

News October 1, 2025

தந்தையை மிஞ்சிய மகள்

image

இன்று வெளியான ‘ஹூருன் ரிச் லிஸ்ட் 2025’ என்ற இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்துள்ளார் ரோஷினி நாடார். இதை பார்த்த பலரும் அவரின் தந்தை ஷிவ் நாடார் ஏன் பட்டியலில் இல்லை என்று கேட்கின்றனர். HCL குழும நிறுவனரான ஷிவ் நாடார், அதன் 47% பங்குகளை மகள் ரோஷினியின் பெயருக்கு மாற்றிவிட்டார். இதனாலேயே HCL-இன் சேர்பர்சனாக இருக்கும் ரோஷினி தற்போது நாட்டின் 3-வது பெரும் பணக்காரராக உயர்ந்துள்ளார்.

News October 1, 2025

மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி

image

காந்தி ஜெயந்தியையொட்டி தமிழகம் முழுவதும் நாளை(அக்.2) டாஸ்மாக் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து டாஸ்மாக் கடைகளும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும் என்றும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவிட்டு வருகின்றன. மேலும், விதிகளை மீறி மது விற்பனை செய்தாலோ, கள்ளச் சந்தையில் பதுக்கினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. SHARE IT.

News October 1, 2025

Cinema Roundup: தெலுங்கு சினிமாவில் மீண்டும் நயன்தாரா

image

*பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’ படம் அக்.17-ம் தேதி ரிலீசாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு. *ஜீவாவின் அடுத்த படத்திற்கு ‘தலைவர் தம்பி தலைமையில்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. *சிரஞ்சீவியின் புதிய படத்தில் சசிரேகா என்ற கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். *கமலின் ‘நாயகன்’ படம் நவ.6-ல் ரீ-ரிலீசாகிறது. * நடிகை டிம்பிள் ஹயாத்தி தன்னை அடித்து துன்புறுத்தியதாக அவர் வீட்டு பணிப்பெண் போலீசில் புகார்.

error: Content is protected !!