News June 19, 2024

BREAKING: கூண்டோடு சஸ்பெண்ட் செய்தார் முதல்வர்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 10 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். கள்ளச்சாராயத்தால் யாரும் உயிரிழக்கவில்லை கூறிய நிலையில் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், எஸ்.பி., டி.எஸ்.பி மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவை சேர்ந்த போலீசார் கூண்டோடு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Similar News

News March 15, 2026

தேர்தல் நடத்தை விதி என்றால் என்ன?

image

தேர்தல் நடத்தை விதிகள் (Model Code of Conduct) என்பது தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்த அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்காக வகுக்கப்படும் வழிகாட்டுதல்கள் ஆகும். ECI தேர்தலை அறிவித்தவுடன் இந்த நடைமுறை அமலுக்கு வந்துவிடும். அரசு அதிகாரம், பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுத்து, அனைத்து வேட்பாளர்களுக்கும் சமமான வாய்ப்பை உறுதி செய்வது நடத்தை விதியின் முக்கிய நோக்கம்.

News March 15, 2026

சொந்த வாகனங்களுக்கான FASTag கட்டணம் உயர்கிறது

image

சொந்த வாகனங்களுக்கான வருடாந்தர FASTag கட்டணம் 2.5% உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, ₹3,000-லிருந்து ₹3,075 ஆக கட்டணம் உயர்கிறது. சொந்த கார், ஜீப், வேன்களுக்கு மட்டுமே இக்கட்டண மாற்றம் பொருந்தும். வணிக ரீதியான வாகனங்களுக்கு தற்போதுள்ள கட்டண நடைமுறையே பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு ஏப்.1 முதல் அமலுக்கு வருவதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கூறியுள்ளது.

News March 15, 2026

கேஸ் சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உயிரிழப்பு

image

சென்னை நாவலூரிலுள்ள வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் (4 வயது பெண் & ஒன்றரை வயது ஆண்) உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலிண்டர் வெடித்ததும் வீட்டுச்சுவரும் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கிய மேலும் 7 பேர் ஹாஸ்பிடலில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அருகிலிருந்த 3 வீடுகள், பைக், கார் ஆகியவையும் சேதமடைந்துள்ளன. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!