News January 21, 2026
BREAKING: அனைத்து பள்ளிகளுக்கும் புதிய உத்தரவு

சமவேலைக்கு சம ஊதியம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினால், அவர்களை தன்னிச்சையாக அனுமதிக்கக் கூடாது என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மாவட்ட கல்வி அலுவலரின் அனுமதியை பெற்ற பிறகே, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுமதி பெறாதவர்களை பணிக்கு திரும்ப அனுமதிக்க கூடாது என HM-களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News February 8, 2026
இரவு நேரத்தில் தயிர் சாப்பிடலாமா?

இரவில் தயிர் சாப்பிடுவது நல்லதா என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. பொதுவாக இரவு நேரங்களில் தயிர் சாப்பிடுவது தவறு இல்லை. ஆனால், செரிமானப் பிரச்னைகள் உள்ளவர்களுக்கு, இது அஜீரணத்தை ஏற்படுத்தும். தயிர் கொழுப்பும் புரதமும் நிறைந்த ஓர் உணவு என்பதால் இரவில் அது ஜீரணிப்பது சற்றுக் கடினம். சுவாசக் குழாய்களில் அதிக சளி சேரும் என்பதால் ஆஸ்துமா, இருமல், சளி பிரச்னை உள்ளவர்களும் இரவில் தயிரைத் தவிர்ப்பது நல்லது.
News February 8, 2026
நள்ளிரவில் ரஜினியுடன் BIKE RIDE: நடிகை ராதிகா

பல ஆண்டுகளுக்கு முன் நள்ளிரவில் ரஜினியுடன் பைக்கில் ஊர் சுற்றியது குறித்து ராதிகா மனம் திறந்து பேசியுள்ளார். இருவரும் பைக்கில் சென்றபோது, லதா ரஜினியின் சகோதரரான ரவி(அனிருத்தின் தந்தை) காரில் வந்து வழிமறித்ததாகவும், ரஜினி யாரோ ஒரு பெண்ணுடன் ரகசியமாக செல்கிறார் என தவறாக புரிந்து கொண்டதாகவும் ராதிகா குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த சம்பவம் லதா ரஜினிக்கு தெரியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
News February 8, 2026
திமுக அரசு இருந்து என்ன பயன்? விஜய்

குரூப்-2 மற்றும் 2 ஏ முதன்மைத் தேர்வுகள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதற்கு விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இளைஞர்களுக்கு நல்லதொரு நம்பிக்கையான எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்காத இந்த அரசு, இருந்து என்ன பயன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இந்த தேர்வு ரத்து, கபட நாடகத் திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையே வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவும் விமர்சித்துள்ளார்.


