News October 13, 2025
கமலாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

விஜயகாந்த் இல்லத்தை தொடர்ந்து, பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கும், கவர்னர் மாளிகைக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மோப்ப நாய்கள் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்துள்ளது. கடந்த சில நாள்களாகவே, CM, EPS, விஜய் மற்றும் நடிகர், நடிகைகளின் வீடுகளுக்கு தொடர்ந்து மிரட்டல் வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 13, 2025
20 பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவிப்பு

காசா அமைதிக்கான உச்சி மாநாடு, இன்று எகிப்தில் நடைபெறுகிறது. முன்னதாக, போர் நிறுத்தம் தொடர்பாக இஸ்ரேல் – ஹமாஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனையடுத்து, 20 இஸ்ரேல் பணயக் கைதிகளை ஹமாஸ் இன்று விடுவித்துள்ளது. ஏற்கெனவே 20 பணயக் கைதிகளின் பட்டியல் இஸ்ரேலிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர்கள் காசாவிலிருந்து ரெட் கிராஸ் வாகனங்கள் மூலம் அழைத்து வரப்படுகின்றனர்.
News October 13, 2025
தமிழக அரசு அவசரம் காட்டக்கூடாது: ராமதாஸ்

சமூக, சாதிய அடையாள பெயர்களை மாற்றுவதில் TN அரசு அவசரம் காட்டக்கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது சமூக ஒற்றுமைக்கு எதிராக உள்ளது என்று கூறியுள்ள அவர், காலங்காலமாக இருக்கும் பெயர்களை நீக்குவது மக்களிடத்தில் குழப்பத்தையே ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் பொறுமையோடு, மக்களின் கருத்தறிந்து முறையாக செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News October 13, 2025
4 நாள்களுக்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்

சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்துவதற்கான அலுவல் கூட்டம் இன்று நடைபெற்றது. இதன் முடிவில், நாளை (அக்.14) முதல் அக்.17 வரை கூட்டத்தொடரை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. நாளை, மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிப்பு, கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். தொடர்ந்து நடைபெறும் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் முக்கிய பிரச்னைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளன.