News October 11, 2025
தீபாவளிக்கு கருப்பு பட பாடல்: RJ பாலாஜி

சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ படம் தீபாவளி ரிலீஸாக வர வேண்டிய நிலையில், CG பணிகளால் தள்ளிப்போனதாக RJ பாலாஜி தெரிவித்துள்ளார். தயாரிப்பாளரை படம் மிகவும் கவர்ந்ததாக கூறியுள்ள அவர், கிட்டத்தட்ட படத்தின் பணிகள் முடிவடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு படத்தின் முதல் பாடல் வெளியாகும் என்றும் சரவெடி அப்டேட்டை கொடுத்துள்ளார். இதனால் சூர்யா ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
Similar News
News October 12, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.12) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News October 12, 2025
பிக்பாஸ் வீட்டில் முதல் எலிமினேஷன்

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 முதல் வாரத்திலேயே 2 போட்டியாளர்கள் வீட்டில் இருந்து வெளியேறினர். இந்த வார நாமினேஷனில் திவாகர், ஆதிரை, கலையரசன், வியானா, அப்சரா, பிரவீன் ராஜ், பிரவீன் காந்தி இடம்பெற்றிருந்த நிலையில், முதல் எலிமினேஷனாக பிரவீன் காந்தி வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். முன்னதாக, தனிப்பட்ட காரணங்களுக்காக நந்தினியும் வீட்டில் இருந்து நடையை கட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
News October 12, 2025
ஒரு பெயரில் 2,253 வார்த்தைகளா!

ஒருவரின் பெயரில் அதிகபட்சம் ஒருசில வார்த்தைகள் இருக்கலாம். ஆனால், நியூசி.,யை சேர்ந்த லாரன்ஸ் என்பவரின் பெயரில் 2,253 வார்த்தைகள் உள்ளன. இதை சொல்லவே 20 நிமிடம் ஆகுமாம். இதையடுத்து அவரின் பெயர் கின்னஸ் சாதனையில் இடம்பிடித்துள்ளது. எல்லோரும் ஏதேதோ சாதனைகள் செய்கின்றனர். நாம் எதையாவது செய்தால் என்ன என்று நினைத்தவர், கோர்ட்டை அணுகி தன் பெயரை இவ்வளவு பெரிதாக வைக்க பர்மிஷன் வாங்கிக் கொண்டாராம்.