News October 11, 2025

தீபாவளிக்கு கருப்பு பட பாடல்: RJ பாலாஜி

image

சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ படம் தீபாவளி ரிலீஸாக வர வேண்டிய நிலையில், CG பணிகளால் தள்ளிப்போனதாக RJ பாலாஜி தெரிவித்துள்ளார். தயாரிப்பாளரை படம் மிகவும் கவர்ந்ததாக கூறியுள்ள அவர், கிட்டத்தட்ட படத்தின் பணிகள் முடிவடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு படத்தின் முதல் பாடல் வெளியாகும் என்றும் சரவெடி அப்டேட்டை கொடுத்துள்ளார். இதனால் சூர்யா ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

Similar News

News December 5, 2025

BREAKING: செங்கோட்டையனின் அடுத்த சம்பவம்

image

புதுச்சேரியில் டிச.9-ல் பொதுக்கூட்டம் நடத்த தவெக அனுமதி கோரியுள்ள நிலையில், சென்னையில் உள்ள WAR ROOM-ல் செங்கோட்டையன் திடீர் ஆலோசனை நடத்தினார். புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்ற இக்கூட்டத்தில், இனி பொதுக்கூட்டமாகவே பரப்புரையை தொடரலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திமுக, அதிமுக முக்கிய புள்ளிகள் சிலரை தவெகவில் இணைப்பது குறித்தும் செங்கோட்டையன் ஆலோசித்துள்ளார்.

News December 5, 2025

சச்சரவை தவிர்க்கவே தீபம் ஏற்ற அனுமதி மறுப்பு: TN அரசு

image

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதுரை HC-ன் உத்தரவை எதிர்த்து SC-ல் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அதில் 100 ஆண்டுகளாக தீபம் ஏற்றும் இடத்திற்கு பதிலாக வேறு இடத்தில் ஏற்ற கோருவதாகவும், அவ்விடம் தர்காவுக்கு 15 மீ தொலைவில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மதுரை HC உத்தரவால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும், தேவையற்ற சச்சரவை தவிர்க்கவே தீபம் ஏற்ற அனுமதி தரவில்லை என மனுவில் கூறப்பட்டுள்ளது.

News December 5, 2025

BREAKING: இன்று அனைத்து பள்ளிகளுக்கும்.. வந்தது உத்தரவு

image

இன்று அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதில், மாணவர்களின் கல்வித் தரம், பள்ளிகளில் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்துவது, மாணவர்களுக்கான அரசுத் திட்டங்களை எடுத்துரைப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன. ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொள்ளும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம், மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை நடத்தப்படும்.

error: Content is protected !!