News October 8, 2025
கொங்கு மண்டலத்தை குறிவைக்கும் பாஜக?

பாஜக தேர்தல் பொறுப்பாளர் பைஜயந்த் பாண்டா மற்றும் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் நேற்று EPS-ஐ சந்தித்து தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர். 45 நிமிடங்கள் நீடித்த இந்த ஆலோசனையில், வரும் தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, கடந்த மக்களவை தேர்தலில் அதிக வாக்குகளை பெற்ற தொகுதிகள் மற்றும் கொங்கு மண்டலத்தில் அதிக சீட்களை கேட்டுள்ளதாம்.
Similar News
News October 8, 2025
PM மோடிக்காக ட்வீட் போட்ட EPS

25 ஆண்டுகளாக அரசின் தலைமை பொறுப்பில் நீடித்துவரும் PM மோடிக்கு இபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து பதவி வகித்து வரலாற்று சாதனை படைத்ததாக குறிப்பிட்ட அவர், PM தொலைநோக்குப் பார்வையுடன் இருப்பதை காட்டும் மைல்கல் இது எனவும் புகழ்ந்துள்ளார். மேலும், PM மோடி தேசத்திற்கு நேர்மையுடன் சேவை ஆற்றுவதாகவும், ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.
News October 8, 2025
இன்று முதல் அமலுக்கு வந்தது

Google Pay, PhonePe, Paytm மூலம் பணம் அனுப்பும்போது இனி PIN நம்பரை உள்ளிடவேண்டிய அவசியமில்லை. மாறாக, முகம் (அ) கைரேகையை வைத்தே ₹5,000 வரை பணம் அனுப்பலாம். PIN நம்பரை விட இவை பாதுகாப்பானது என கருதி NCPI இதை நடைமுறைப்படுத்தியுள்ளது. Biometric முறை நடைமுறைக்கு வந்தாலும், PIN நம்பர் முறையும் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News October 8, 2025
நீ எண்டு கார்டு வச்சா இவன் டிரெண்ட மாத்தி வைப்பான்!

குண்டாக இருக்கிறார்; Retire ஆக சொல்லுங்க என தொடர்ந்து விமர்சித்தவர்களுக்கு சவுக்கடி ரிப்ளை கொடுத்துள்ளார் ஹிட்மேன் ரோஹித் சர்மா. நேற்று நடைபெற்ற CEAT விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், பார்க்க பயங்கர ஸ்லிம்மாக மாறியுள்ளார். மார்ச் மாதத்திற்கு பிறகு, ரோஹித் சர்மா ப்ளூ ஜெர்சியில் வரும் 19-ம் தேதி தொடங்கும் ஆஸி. அணிக்கு எதிரான ODI தொடரில் விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.