News October 8, 2025
நீ எண்டு கார்டு வச்சா இவன் டிரெண்ட மாத்தி வைப்பான்!

குண்டாக இருக்கிறார்; Retire ஆக சொல்லுங்க என தொடர்ந்து விமர்சித்தவர்களுக்கு சவுக்கடி ரிப்ளை கொடுத்துள்ளார் ஹிட்மேன் ரோஹித் சர்மா. நேற்று நடைபெற்ற CEAT விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், பார்க்க பயங்கர ஸ்லிம்மாக மாறியுள்ளார். மார்ச் மாதத்திற்கு பிறகு, ரோஹித் சர்மா ப்ளூ ஜெர்சியில் வரும் 19-ம் தேதி தொடங்கும் ஆஸி. அணிக்கு எதிரான ODI தொடரில் விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 16, 2025
புதுவையில் 2026-ம் ஆண்டு பொது விடுமுறை தினங்கள்

புதுச்சேரி அரசின் கட்டுப் பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலங்கள். அரசு சார்பு நிறுவனங்கள், வாரியங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் பொதுவிடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி 2026-ம் ஆண்டிற்கான பொது விடுமுறை தினங்கள் குறித்த அறிவிப்பை, புதுச்சேரி அரசு இன்று வெளியிட்டுள்ளது. மொத்தம் 17 நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவித்துள்ளது.
News November 16, 2025
அதிசயமே அசந்து போகும் ராஷி கண்ணா

ராஷி கண்ணா, தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் கலக்கி வருகிறார். அரண்மனை 3&4 படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மேலும், இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் ராஷி கண்ணாவுக்கு, பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. இவரது, பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோக்களில், சிலை போல போஸ் கொடுத்துள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. உங்களுக்கும் பிடித்திருந்தா, ஒரு லைக் போடுங்க.
News November 16, 2025
நாளை பள்ளிகள் விடுமுறை.. முதல் மாவட்டமாக அறிவிப்பு

கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் நாளை(நவ.17) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அங்கும் விடுமுறை அளிக்கப்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்த அறிவிப்பு இன்றிரவோ (அ) நாளை காலையோ தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


