News April 16, 2024
ஏழைகள் முன்னேறுவதை பாஜக விரும்பவில்லை

சமூகத்தில் பின்தங்கிய மக்களும், ஏழைகளும் முன்னேறுவதை பாஜகவினருக்கு விரும்பவில்லை என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் லாலு பிரசாத் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், அம்பேத்கர் உருவாக்கிய அரசமைப்புச் சட்டத்தை மாற்றிவிட்டு, புதிதாக அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவோம் என்று பாஜக தலைவா்கள் பலா் பேசி வருகின்றனார். அரசமைப்புச் சட்டத்தை மாற்ற பாஜக முயற்சித்தால், மக்கள் அமைதியாக இருக்க மாட்டர்கள் என்றார்.
Similar News
News February 19, 2026
இந்த 3 இடங்களில் ஜெயித்தால் கோட்டை கன்ஃபார்ம்!

தமிழக தேர்தல் களத்தில் கட்சிகளின் வியூகம் எந்த அளவிற்கு பார்க்கப்படுகிறதோ, அதே அளவிற்கு சென்டிமெண்டும் கவனிக்கப்படும். அந்தவகையில் ராமநாதபுரம், நாமக்கல், வேடச்சந்தூர் ஆகிய 3 தொகுதிகளில் எந்த கட்சி வெற்றி பெறுகிறதோ அந்த கட்சிதான் ஆட்சி அமைக்கும் என நம்பப்படுகிறது. அதன்படியே 1967 முதல் 2016 வரை இந்த 3 தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சிகள் அல்லது அதன் கூட்டணியே ஆட்சி அமைத்துள்ளது என்பது தான் வரலாறு.
News February 19, 2026
BIG FLASH: தங்கம் விலை ஒரே அடியாக மாறியது

சர்வதேச சந்தையில் கடந்த 3 நாள்களாக சரிந்து வந்த தங்கம் விலை ஒரே அடியாக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸுக்கு(28g) $91 அதிகரித்து $4,979-ஆக உள்ளது. அதேபோல் வெள்ளியின் விலையும் $3 அதிகரித்து $77-ஆக உள்ளது. இதனால் இந்திய சந்தையில் இன்று தங்கம், வெள்ளியின் விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளது. சென்னையில் கடந்த 3 தினங்களாக சவரனுக்கு ₹2,640 விலை குறைந்தது கவனிக்கத்தக்கது.
News February 19, 2026
FLASH: நள்ளிரவில் தமிழக மீனவர்கள் அதிரடி கைது

எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் நள்ளிரவில் கைது செய்துள்ளனர். அவர்களின் 2 விசைப்படகுகள், மீன்கள், வலைகள் உள்ளிட்ட உடைமைகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. நேற்று முன்தினம் <<19154691>>காரைக்கால் மீனவர்கள் 25 பேரை <<>>கைது செய்த நிலையில், மீண்டும் இலங்கை கடற்படையினர் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளதாக மீனவர்களின் குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.


