News April 16, 2024
ஏழைகள் முன்னேறுவதை பாஜக விரும்பவில்லை

சமூகத்தில் பின்தங்கிய மக்களும், ஏழைகளும் முன்னேறுவதை பாஜகவினருக்கு விரும்பவில்லை என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் லாலு பிரசாத் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், அம்பேத்கர் உருவாக்கிய அரசமைப்புச் சட்டத்தை மாற்றிவிட்டு, புதிதாக அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவோம் என்று பாஜக தலைவா்கள் பலா் பேசி வருகின்றனார். அரசமைப்புச் சட்டத்தை மாற்ற பாஜக முயற்சித்தால், மக்கள் அமைதியாக இருக்க மாட்டர்கள் என்றார்.
Similar News
News April 29, 2025
IPL: 4 சதங்களுமே மேஜிக்தான்!

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 4 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. அதை அடித்த 4 வீரர்களும் இந்தியர்கள்தான். அதிலும் அனைத்து பேட்ஸ்மேன்களும் லெஃப்ட் ஹேண்ட் என்பது தான் இதில் கூடுதல் சிறப்பு. பஞ்சாப்பிற்கு எதிரான ஆட்டத்தில் அபிஷேக் 141 ரன்களும், ராஜஸ்தானுக்கு எதிராக கிஷன் 106, சென்னைக்கு எதிராக பிரியான்ஷ் 103 மற்றும் குஜராத்திற்கு எதிரான நேற்றைய போட்டியில் சூர்யவன்ஷி 101 ரன்களையும் அடித்துள்ளனர்.
News April 29, 2025
UPI சரியா வேலை செய்யணும்.. அமைச்சர் கண்டிப்பு

கடந்த ஜனவரி, மார்ச் மாதங்களில் 282 நிமிடங்கள் UPI வேலை செய்யாத நிலையில், இனி இதுபோன்ற இடையூறு இருக்கக் கூடாது என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டிப்பு காட்டியுள்ளார். டெல்லியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிதித்துறை செயலாளர், RBI, NPCI அதிகாரிகள் பங்கேற்றனர். அதில் பேசிய அமைச்சர், அடுத்த 3 ஆண்டுகளில் நாளொன்றுக்கு 100 கோடி UPI பரிவர்த்தனைகள் நடக்க நடவடிக்கை எடுக்கவும் ஆணையிட்டுள்ளார்.
News April 29, 2025
மே தின விடுமுறை: சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

மே தினம், வார விடுமுறையையொட்டி 2,119 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என TNSTC அறிவித்துள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி உள்ளிட்ட இடங்களுக்கு நாளை 565 பஸ்களும், வெள்ளி, சனிக்கிழமை 375 பஸ்களும் இயக்கப்படவுள்ளது. கோயம்பேட்டிலிருந்து நாகை, ஓசூர், பெங்களூருவுக்கு 100 பஸ்களும், கோவை, திருப்பூர், ஈரோட்டுக்கு 250 பஸ்களும், மாதவரத்தில் இருந்து 715 பஸ்களும் இயக்கப்படவுள்ளன.