News April 16, 2024
ரன்களை வாரி வழங்கி சாதனை படைத்த புவனேஷ் குமார்

ஐபிஎல் தொடரின் ஒரு சீசனில் 3 முறை 50+ ரன்களை விட்டுக்கொடுத்த முதல் இந்திய வீரர் என்ற மோசமான சாதனையைப் படைத்துள்ளார் ஹைதராபாத் அணியின் புவனேஸ்வர் குமார். இவர், 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிராக 51, மும்பைக்கு எதிராக 53, பெங்களூருக்கு எதிராக 60 ரன்களை வாரி வழங்கியுள்ளார். இந்த 3 ஆட்டங்களிலும் அவர் விக்கெட் எதையும் கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 10, 2025
அதிமுகவுடன் கூட்டணி இல்லை.. அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்

அதிமுக தலைமை வகிக்கும் NDA கூட்டணியில் மீண்டும் இணையப்போவதில்லை என டிடிவி தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னையில், செய்தியாளர்களை சந்தித்த அவர், ரோட்டில் கடை போட்டு கூவிக் கூவி அழைப்பது போல கூட்டணிக்கு அழைக்கும் நிலையில் EPS உள்ளதாக சாடினார். மேலும், விஜய்யை கூட்டணிக்கு வரவில்லை என்றால் கட்சி(தவெக) அழிந்துவிடும் என சிலர் மிரட்டும் தொனியில் பேசுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
News November 10, 2025
சுதந்திரம் அடைவதற்கு முன்பே இவை நாட்டில் பேமஸ்!

இன்று பிரபலமாக இருந்தாலும், மேலே குறிப்பிட்டுள்ள பிராண்டுகள் அனைத்தும் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு, தொடங்கப்பட்டு விட்டன. இவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள பலதும் நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் பொருள்களாகும். அவை என்னென்ன என தெரிஞ்சிக்க மேலே உள்ள போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து பார்க்கவும். மேலே குறிப்பிடப்பட்டதில், உங்களுக்கு மிகவும் பிடிச்சது எது?
News November 10, 2025
போர் நிறுத்தம்: டிரம்புக்கு மீண்டும் பாக்., நன்றி

இந்தியா – பாக்., போரை நிறுத்திய டிரம்புக்கு பாக்., PM ஷெபாஸ் ஷெரீஃப் மீண்டும் நன்றி கூறியுள்ளார். டிரம்ப்பின் துணிச்சல், உறுதியான தலைமையினால்தான் இந்தியா – பாக்., இடையிலான போர் தவிர்க்கப்பட்டு, பல லட்சம் மக்களின் உயிர் காக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். ஆனால், டிரம்பின் தலையீட்டால் போர் நிறுத்தம் என்ற வாதத்திற்கு இந்தியா தரப்பில் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.


