News October 9, 2025
சற்றுநேரத்தில் தொடங்குகிறது ‘கர்வா செளத்’

வடமாநிலங்களில் கொண்டாடப்படும் கர்வா செளத் பண்டிகை, தற்போது தென் மாநிலங்களிலும் பிரபலமாகி வருகிறது. முழுநிலவு கழிந்த 4-ம் நாள் (இன்றிரவு 10:54 PM தொடங்கி நாளை 07:38 PM-க்கு முடிவடையும்) இது கொண்டாடப்படுகிறது. கணவனுக்கு நீண்ட ஆயுள் வேண்டி, காலை முதல் மாலைவரை விரதம் இருந்து மனைவியர் நோன்பு இருப்பர். பின், நிலவையும் கணவரையும் சல்லடை மூலம் பார்த்த பின் தண்ணீர் குடித்து நோன்பை முடிக்கின்றனர்.
Similar News
News October 10, 2025
CM ஸ்டாலினுக்கு திறமை இல்லை: EPS

திமுக ஆட்சியில், குடிநீரில் மலம் கலக்கும் கொடுமையான செயல் நடப்பதாக EPS விமர்சனம் செய்துள்ளார். கையாலாகாத அரசு ஆட்சி செய்வதால் தான் வேங்கைவயலில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கவில்லை என்று குற்றம்சாட்டிய EPS, அந்த பிரச்னை தீர்வதற்குள் தற்போது சோழவந்தான் பகுதியில் உள்ள நீர்த்தொட்டியில் மலம் கலக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார். இவற்றையெல்லாம் தீர்க்க கூடிய திறமை CM-க்கு திறமை இல்லை என்றும் அவர் சாடினார்.
News October 10, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 10, புரட்டாசி 24 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 09:15 AM – 10:15 AM & 4.45 PM – 5.45 PM ▶கெளரி நல்ல நேரம்: 01:45 AM – 2:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: சதுர்த்தி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: தேய்பிறை
News October 10, 2025
Cinema Roundup: ரீ-ரிலீசாகும் அஞ்சான்

சூர்யாவின் ‘அஞ்சான்’ படம் விரைவில் ரீ-ரிலீசாகும் என அறிவிப்பு. *கிஷென் தாஸின் ‘ஆரோமலே’ படம் நவம்பர் 7-ம் தேதி வெளியாகிறது. *விஜய் சேதுபதியின் அடுத்த படத்திற்கு தேசிய விருது வென்ற ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையமைக்கவுள்ளார். *ஜி.வி.பிரகாஷின் ‘மெண்டல் மனதில்’ படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. *மகேஷ் பாபுவின் SSMB29 அதிகாரப்பூர்வ டைட்டில் நவ.16-ல் வெளியாகும் என தகவல்.